2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை சந்தித்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்டாத நிலையில், ஆட்சியமைக்க கூடுதல் ஆதரவு தேவைப்பட்டது.
இந்தச் சூழலில் தவெக சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோருக்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டது.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தொங்கு சட்டசபை நிலை உருவானது. தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனிடையே, பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், மதச்சார்பற்ற கட்சிகளிடம் ஆதரவு தேடும் நடவடிக்கையை தவெக மேற்கொண்டது. கலந்து ஆலோசித்து விஜய்க்கு ஆதரவு தருவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினர். இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்தனர். திருமாவளவன், வீரபாண்டியன், சண்முகம் உள்ளிட்டோர் திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: ரத்தம் தெறிக்க பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக முன்னாள் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை... காரணம் என்ன?
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தபின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார். அப்போது ஸ்டாலின் என்ன சொன்னார் என்பது குறித்தும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவ அளிப்பது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்திய பின் முடிவை அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “திருமாவளவனை முதல்வராக்குங்க...” - திராவிட கட்சிகளுக்கு செக் வைத்த சிந்தனை செல்வன்...!