விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் உருவச் சாயலைக் கொண்டிருந்ததாலும், சமூக வலைத்தளங்களில் விசிக கொள்கைகளையும், தலைவர் திருமாவளவனின் பேச்சுகளையும் ரீல்ஸ்களாகப் பரப்பி வந்ததாலும் மிகவும் அறியப்பட்டிருந்த விசிக நிர்வாகி பண்ருட்டி ரமேஷ் அவர்கள், திடீர் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி விசிக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பண்ருட்டி ரமேஷ், பார்ப்பதற்கு அச்சு அசலாகத் திருமாவளவன் போலவே தோற்றமளிப்பார். இவரை முதன்முறையாகப் பார்ப்பவர்கள் திருமாவளவன் என்றே நினைத்து விடுவார்கள்.
திருமாவளவனால் ஈர்க்கப்பட்டு விசிக-வில் இணைந்த இவர், விசிக கொள்கைகளைச் சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரப்பி வந்தார். இவர் பல்வேறு பாட்டுகளுக்கு வாயசைத்து, ரீல்ஸ்களை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு வந்ததால், விசிகவினரிடையே 'டிக் டாக் மன்னன்' என்றும் அழைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: #BREAKING: பேரதிர்ச்சி... கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு... காற்றில் கரைந்த கவிச் சிகரம்...!
திருமாவளவன் போல் இருந்த காரணத்தால், பண்ருட்டி ரமேஷுக்கு விசிகவினர் மத்தியில் நல்ல மதிப்பு, மரியாதை இருந்து வந்தது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருந்து வந்த பண்ருட்டி ரமேஷ் அவர்களுக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடலூர் கல்யாண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணன் பண்ருட்டி திருமா ரமேஷ் அவர்களுக்கு எமது செம்மார்ந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று விசிக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தி அவர்கள் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தற்போது மாரடைப்பால் மறைவெய்தினார் எனும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள் என்று அவர் பண்ருட்டி ரமேஷை ஒரு 'வெள்ளந்தியான மனிதராக' பார்த்ததாகக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பட்டியலின மக்களுக்காகக் குரல் கொடுக்கும் திருமாவளவனின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கட்சிக்குச் சமூக வலைத்தளங்களில் ஒரு அடையாளமாக விளங்கிய பண்ருட்டி ரமேஷின் மறைவு, விசிகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்தை சின்னாபின்னமாக்கும் மத்திய அரசு... முதல்வர் ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு...!