2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்த நிலையில் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பேசிய விஜய், திமுக ஆட்சி மீண்டும் அமையக்கூடாது என்று வலியுறுத்தினார்.
அனைவரும் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது நான் முன்பு சொன்னது போலவே ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் ஆனால் சரியான சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.

அவர்கள் எப்படி ஸ்மார்ட்டாக நம்மை ஏமாற்றி கொள்ளையடித்தார்களோ அதே போல் அவர்களை நாம் ஸ்மார்ட்டாக ஏமாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேசிய விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: அண்ணன் வர்றாரு... விசில் போடு..! திருச்சியில் ஏப்.2 ல் விஜய் வேட்பு மனுத் தாக்கல்...!!
வாக்காளர்களை பணம் வாங்கச் சொன்ன விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். தவெக தலைவர் விஜய் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் விஜய்யின் பேச்சு நியாயமான, சுதந்திரமான தேர்தல் முறையை தகர்க்கும் செயல் எனவும் சிபிஐ கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: விஜய் மேல ஏன் CASE போட்டீங்க..? என்னதான் நடந்துச்சு... விளக்கம் கேட்ட தலைமை தேர்தல் அதிகாரி..!!