கடந்த ஏப்ரல் 21 அன்று, தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் தனது பிரச்சாரத்தை உச்சக்கட்டத்தில் கொண்டு சென்றார். சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை, தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய தருணமாகப் பதிவானது. இந்த உரையில் விஜய், திமுக-அதிமுக ஆட்சிகளின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். மக்களிடையே புதிய அரசியல் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
உரையின் தொடக்கத்தில் விஜய், தமிழ்நாட்டின் நிலையை சுட்டிக்காட்டினார். “தமிழ்நாட்டுல இதுவரைக்கும் வாங்காத அளவுக்கு ஐந்தரை லட்சம் கடனை திமுக அரசு வாங்கி வைத்திருக்கிறது. எல்லா வரியையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். தவெகவின் கொள்கைகளில் இருந்து ஒரு அங்குலம் கூட மாறப் போவதில்லை என்று உறுதியளித்தார். மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையை உறுதியாக நிலைநாட்டுவதாகவும், “எம்மதமும் சம்மதம்” என்ற கொள்கையைப் பின்பற்றுவதாகவும் வலியுறுத்தினார். “நான் ஸ்டாலின் சார் மாதிரி கிடையாது. சொன்னா மாறமாட்டேன். 100% இந்த விஜயை நம்பலாம்” என்று தனது நேர்மையை எடுத்துரைத்தார்.

இந்த இறுதிக் கட்ட பிரச்சாரத்தின் போது, விஜய் பல இடங்களில் பிரச்சார பேருந்தின் மேல் நின்று பேசிய காட்சிகளும் குறிப்பிடத்தக்கவை. மேடை அமைக்கப்படாமல், நேரடியாக பேருந்தின் மேற்பகுதியில் ஏறி நின்று மக்களுடன் உரையாடிய அவரது இந்த அணுகுமுறை, அவரது எளிமை மற்றும் மக்களுடனான நெருக்கத்தை வெளிப்படுத்தியது.
இதையும் படிங்க: “ரீல்ஸ் போட நேரம் இருக்கு... பக்தர்களை கவனிக்க நேரமில்லையா?” - தினகரன் தாக்கு..!
ரோடு ஷோக்களின்போது பேருந்தை நிறுத்தி, கூட்டத்தை நோக்கி பேசிய இந்த நிகழ்வுகள், அவரது பிரச்சாரத்துக்கு தனித்துவமான ஆற்றலை அளித்தன. மக்கள் கூட்டம் பேருந்தைச் சூழ்ந்து நின்ற நிலையில், விஜய் உயரத்தில் நின்று கைகளை உயர்த்தி, விசில் சின்னத்துக்கு ஆதரவு கோரிய நிகழ்வு பெரும் மாற்றத்திற்கு விதையாக மாறின. இந்த நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் நிலையில் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் நன்றி தெரிவிக்க உள்ளார். திருச்சியில் இன்று நடக்கும் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச தனியாக மேடை அமைக்கப்படவில்லை. வழக்கம்போல விழா அரங்கிற்குள் நிற்கும் தனது பரப்புரை பேருந்தின் மீது நின்று முதல்வர் விஜய் உரையாற்றுகிறார்.
இதையும் படிங்க: "வேதனையா இருக்கு"..!! தாயை இழந்து வாடும் அஜித்...! உருக்கமாக முதல்வர் விஜய் இரங்கல்..!!