கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது. விஜய் விரைவில் கரூருக்கு செல்வார் என்று கூறப்பட்டது. அதற்காக காவல்துறை அனுமதி கேட்டு கடிதமும் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் தெரிவித்தார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் முடங்கியது. பிறகு கட்சிப் பணிகளை மெல்ல தொடங்கினார் விஜய். இந்த நிலையில் மீண்டும் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலத்தில் இருந்து தனது மக்கள் சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்க இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: உண்மையான வரலாற்று நாள்..!! சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு விஜய் உருக்கமான வாழ்த்து..!!
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் நாளை விஜய் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக உள் அரங்குகளில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வடக்கு நிலுவையில் இருப்பதால் விஜய் புதிய முடிவு எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக நலிவடைந்த பிரிவினரை அழைத்து விஜய் சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நாளை முதல் விஜயின் மக்கள் சந்திப்பு தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், 200 பேருக்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். க்யூ ஆர் கோட் மூலம் அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: களமாடும் விஜய்... மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்... ஆட்டம் ஆரம்பம்...!