ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் முக்கிய தலைவராகவும், தேனி மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க தலைவராகவும் திகழ்ந்தவர். மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்த இவர், பலமுறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்.
2017-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பின்னர் தனித்தனி அணியாகவும் செயல்பட்டார். இருப்பினும், 2022-ல் கட்சியின் பொதுக்குழு மூலம் இபிஎஸ் ஒரே தலைவராக உயர்த்தப்பட்டதால், ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்தப் பின்னணியில், பாஜகவுடனான கூட்டணி மற்றும் அதன் அரசியல் உத்திகளில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
தமிழகத்தில் பாஜக தனது அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்த முயலும் நிலையில், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவை முக்கிய கூட்டணி பங்காளியாக கருதியது.
இதையும் படிங்க: கழட்டி விட்ட பாஜக... அடுத்த ஆட்டத்திற்கு தயாரான ஓபிஎஸ் - நாளை முக்கிய முடிவு?
இதனால், ஓபிஎஸ்-இன் அணியை புறக்கணிப்பது, பாஜகவின் பரந்த அரசியல் உத்தியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. மேலும், பாஜக இபிஎஸ்-உடன் நெருக்கமாக செயல்படுவதாகவும், ஓபிஎஸ்-ஐ தவிர்ப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் ஓ பன்னீர்செல்வத்தின் தரப்பு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜயின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் தரப்பில் அவரே நேரடியாக தமிழக வெற்றி கழகத் தரப்புடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. பாஜக தரப்பில் கூட்டணி இறுதி செய்யப்படாத நிலையில் ஓபிஎஸ் தரப்பு புதிய திட்டம் வகுத்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இருதரப்பும் பேசிக் கூட்டணி இறுதி செய்யப்பட்ட அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஓபிஎஸ் தரப்பு முன்னாள் எம்பி ஒருவர் தமிழக வெற்றிக்கழக தரப்பிற்கு உதவி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கும் ஓபிஎஸ் தரப்பு உதவியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழர்களின் பெருமையை அடகு வைத்திருக்கிறது திமுக அரசு.. தவெக தலைவர் விஜய் கடும் சாடல்..!!