சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் ஜூன் 27ம் தேதி கோயிலுக்கு வந்த பக்தர் சிவகாமி என்பவரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் தங்க நகை மற்றும் 2500 ரூபாய் ரொக்கம் காணாமல் போனதாக புகார் அளித்தார். அதன்பேரில் அஜித்குமார் என்ற இளைஞரை மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றையதினம் தொலைபேசியின் வாயிலாக அவரது தாயார் மற்றும் சகோதரரை தொடர்பு கொண்டு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அக்குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போராட்டத்தை தள்ளிவைத்த தமிழக வெற்றிக் கழகம்.. காரணம் இதுதான்.. வெளியானது முக்கிய தகவல்!!

மேலும் முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அமைச்சர் பெரியகருப்பன், இன்றையதினம் மறைந்த அஜித்குமார் சகோதரரான நவீன்குமாருக்கு காரைக்குடியில் உள்ள சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் டெக்னீசியன் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, தேளி வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் அஜித்குமார் தாயார் மாலதிவுக்கு வழங்கப்பட்டது.

மேலும் முதல்வர் ஸ்டாலின் ஆணையின்படி, அமைச்சர் பெரியகருப்பன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 5 இலட்சம் ரூபாய் நிதியினை அஜித்குமார் தாயார் மாலதியிடம் வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிலையில் திருப்புவனம் மடப்புரத்தில் காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சென்று அஜித் குமாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதை தொடர்ந்து அஜித் குமாரின் தாயார் மற்றும் சகோதருக்கு ஆறுதல் தெரிவித்தார். விஜய்யுடன் தவெக பொதுச்செயலாளர் ஆனந்தும் உடனிருந்தார். அப்போது அவர்களிடம், மிகவும் வருத்தமாக உள்ளது, கவலைப்படாதீங்க, தவெக உடன் இருக்கும் என உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீனிடம் தெரிவித்ததோடு அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கினார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் நாற்காலி என்ன வாடகை சேரா? - விஜயை வெளுத்து வாங்கிய திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்...!