தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சங்கீதா தரப்பில் விவாகரத்து வழங்கு தொடரப்பட்டது. சங்கீதா தனது மனதில் விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சங்கீதா முன்வைத்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், மனைவி சங்கீதாவிற்கு விவாகரத்து அளிக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் சங்கீதா பரஸ்பரமாக பிரிவது தொடர்பாக சென்னையில் நேற்று இருதரப்பு வழக்கறிஞர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மும்பையில் இருந்து வந்த இரு தரப்புக்கும் நெருக்கமான ஜோசியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் பரஸ்பர விவாகரத்திற்காக 250 கோடி ரூபாய் செட்டில்மென்ட் தரவேண்டும் என்று விஜய்யிடம் சங்கீதா கேட்டதாக கூறப்படுகிறது. வேட்பு மனுவில் விஜய் தெரிவித்துள்ள சொத்து பட்டியலின் அடிப்படையில் செட்டில்மெண்ட் தரவேண்டும் என்று சங்கீதா கேட்டதாக கூறப்பட்டுள்ளது தன்னோடு சேர்த்து மகன் மற்றும் மகளுக்கும் செட்டில்மெண்ட் தொகை தர வேண்டும் என்று சங்கீதா கூறியதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி தொகுதியில் டிவி சின்னம்..! ஆதரவு கொடுக்க விஜய் வலியுறுத்தல்..!!
மனைவி சங்கீதாவுக்கு மட்டும் 35 கோடி ரூபாய் செட்டில்மெண்ட் அளிக்க விஜய் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமல்லாது தனது மகன் மற்றும் மகளை தான் பார்த்துக் கொள்வதாக விஜய் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. நாளை விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் நேற்று இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: திருச்சி மக்களே ரெடியா..? விஜய் இன்று பரப்புரை..! தொண்டர்கள் குஷி..!