தமிழகம், புதுவை, காரைக்கால், கேரளா கர்நாடகா, கடலோர ஆந்திர பிரதேசம் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் 58.9 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்றும் அமுதா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் 16ஆம் தேதி வரை வழக்கத்தை விட கூடுதலாக 37 சதவீதம் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்த ஆண்டு 50 சென்டிமீட்டர் வரை மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அக்டோபர் 18ஆம் தேதி கேரளா, கர்நாடக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அக்டோபர் 24ஆம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். இத்தனை புயல்கள் வரும் என்பதை கணக்கிட்டு கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #weatherupdate: வெளுக்க போகுது மழை... 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!
அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக கடலோரப் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: #rainalert: வெளுக்க போகுது மழை... குடை எடுத்தாச்சு... 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!