கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்தது.
கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நேற்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் நாளை கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வெளுக்க போகுதாம் மழை... 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... சென்னைக்கும் எச்சரிக்கை...!
வரும் இருபதாம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அடிச்சு நகர்த்த போகுது... 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... சென்னையிலும் மழை...!