தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைய தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் நான்கு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது எனக் கூறினார். அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவித்தார். தமிழகம், புதுவை, காரைக்காலில் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 21ஆம் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். 19 தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவித்தார். குமரி கடல் ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் குறிப்பிட்டார். 23 ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலாட்டு கொடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 24 ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை வாசிகளே… HIGH ALERT.! சூறையாட போகுது மழை… ரொம்ப உஷாரு…!
24 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 25 ஆம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்க போகுது மழை... அனாவசியமா வெளிய வராதீங்க மக்களே..!