தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
தற்போது தென்மேற்கு வங்கக்கடலின் ஒரு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டது. இதன் காரணமாக வரும் நாட்களில் பரவலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு வடமேற்காக நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னையில் விட்டுவிட்டு பெய்யும் கனமழை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... எங்கெல்லாம் மழை பெய்யும்? அதி முக்கிய அறிவிப்பு...!
அடுத்த 24 மணிநேரத்தில், வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மாலை முதல் மழை தீவிரமடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அதி கனமழை வரை செய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காற்றழுத்தம் புயலாக மாறும் வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை வாசிகளே… HIGH ALERT.! சூறையாட போகுது மழை… ரொம்ப உஷாரு…!