தமிழகத்தில் உள்ள பல்வேறு வழிபாட்டுத்தலங்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அறநிலைய துறையை நவீனமாக்கும் யுக்தியை திமுக அரசு கையில் எடுத்தது.
இதனை அடுத்து பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் முறையைத் தவிர்க்கும் வகையில், கோவில் நிர்வாகங்கள் கணினி மயமாக்கப்பட்டது. இதனால் கோயில்களின் அனைத்து விவரங்களும் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. என்ன முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து பயன்பாட்டிலும் இருந்து வந்தது.

முன்னதாக கோயில்களில் பக்தர்கள் வாடகைதாரர்கள் என கட்டணம் செலுத்துவோர் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதனால் பெரும் சுமை தவிர்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோயில்களுக்கும் தனித்தனி இணையதளம் அமைக்கப்பெற்று அறநிலையத்துறை இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையமா? இ.பி.எஸ். கண்டனம்
இதன் மூலம் அனைத்து கோயில்களின் வருவாயையும் அறநிலையத்துறை கண்காணித்து வருகின்றது. குறிப்பாக கோயில்களில் கணக்கு வழக்குகள் அனைத்தும் இந்த இணையதளம் மூலம் கணக்கு காண்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று பிற்பகல் முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அறநிலையத்துறை இணையதளம் முடங்கியது.

இதனால் கோயில் நிர்வாகத்தில் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. முக்கியமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் இணையதளம் முடங்கியதால் பக்தர்கள் கட்டணம் இன்றி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு பிறகு இணையதளம் சரி செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
இதையும் படிங்க: பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற பூச்சொரிதல் விழா.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்..