சுமார் 1.5 கிமீ உயரம் வரை கிழக்கு உத்தரபிரதேசத்திலிருந்து, கிழக்கு மத்திய பிரதேசம், கிழக்கு விதர்பா மற்றும் தெலுங்கானா வழியாக தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, தேனி, குமரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தருமபுரி, வேலூர், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை, கோவை, கிருஷ்ணகிரி திண்டுக்கல் நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் எங்கெங்கு கனமழை வெளுக்கப்போகுது..?? லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??
இதையும் படிங்க: 2 நாட்கள் அடித்து ஊற்றக் காத்திருக்கும் கனமழை! நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!