நெல் விவசாயம் கேள்விப்பட்டிருப்பீங்க, கரும்பு விவசாயம் கேள்விப்பட்டிருப்பீங்க, ஆனா பாம்பு விவசாயம் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?. பாம்புகளை விவசாயம் செய்யறதுல வியட்நாம் நம்பர் ஒன் நாடா திகழுது. இங்க மரம் செடிகளில் பழங்கள் இருக்காது. அதுக்கு பதிலா பாம்புகள் தான் இருக்குமா? இப்படி ஒரு அதிசய இடத்தை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுட்டு வராங்க.
வியட்நாம் நாட்டில இருக்கு பிரபலமான பாம்பு பண்ணை. அதுதான் ட்ரைராட்ஸ் டோங் டாம் அப்படின்னு சொல்லப்படுது. டோங் டாம் பாம்பு பண்ணை அப்படின்னு இதை சிம்பிளா சொல்லுவாங்க. இதனுடைய பரப்பளவு பாத்தீங்கன்னா சுமார் 12 ஹெக்டர் அதாவது கிட்டத்தட்ட 30 ஏக்கர் 30 ஏக்கர் பரப்பளவுல சுமார் 400க்கும் மேற்பட்ட பாம்புகள் இங்கு வளர்க்கப்படுகிறது. சுமார் 40க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள் அங்கே உள்ளன.
இங்கதான் பாம்பு விவசாயம் செய்றாங்க. ஆண் மற்றும் பெண் பாம்புகள் ஒன்றிணைவதற்கு ஏத்த மாதிரியான இதமான சூழல் இங்கு ஏற்படுத்தி கொடுக்கிறதுனால அதிக அளவில் பாம்புகள் முட்டையிடுறதாகவும் கூறப்படுது. இதன் மூலமாக பாம்பு விவசாயம் அதிக அளவில் செய்யப்படுகிறது. எதுக்காக பாம்புகளை விவசாயம் செய்றாங்க இதன் மூலமா அவங்களுக்கு என்ன லாபம்? அப்படின்னு பாத்தீங்கன்னா, இதிலிருந்து கிடைக்கக்கூடிய விஷத்தை எடுத்து அதை மருந்துகளா மாற்றி உலக நாடுகளுக்கு எக்ஸ்போர்ட் பண்ணிட்டு வராங்க. இதன் மூலமாக பல லாபம் கிடைக்கிறது.
இதையும் படிங்க: காவி உடையில் திருவள்ளுவர் - கோவை புத்தகத் திருவிழாவில் வெடித்தது சர்ச்சை...!
அதன் மூலமாக தான் அவர்கள் பாம்பு பண்ணையை பராமரிக்கிறார்கள். வியட்நாம் என்பது சுற்றுலா தளத்துக்கு பேர் போன ஒரு இடம். இங்க வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கண்டிப்பா டோங் டாம் பாம்பு பண்ணையை பார்த்துட்டு போறதும் வழக்கமா இருக்கு. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினம்தோறும் வந்து பார்க்கறதுனால இதன் மூலமாகவும் இங்க இவங்களுக்கு நல்ல லாபம் வருமானம் கிடைச்சிட்டு வருது. இதே மாதிரி உலக நாடுகள்ல பல இடங்களில் பாம்பு பண்ணைகள் இருக்கு. நம்ம ஊர்ல கூட மாமல்லபுரம் அருகே வடநெமலி பகுதியில பாம்பு பண்ணை ஒன்று உள்ளது. இங்க 400க்கும் மேற்பட்டோர் உறுப்பினரா இருக்காங்க. இங்க பாம்புகளை பிடிச்சிட்டு வந்து கொடுத்தா அதுக்கு ஏத்த மாதிரியான காசும் தராங்களாம். அதுமட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான பாம்புகளை இங்க வளர்கறதுக்கு ஏத்த மாதிரியான இடவசதியும் இருக்கிறது.
இதையும் படிங்க: பரபரப்பை கிளப்பிய டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் - எஸ்.பி. அதிரடி உத்தரவு...!