நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை. ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உடன் தவெக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் முதல் ஆளாக முந்திக்கொண்ட காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு குட்பை கூட சொல்லாமல் தவெகவில் வந்து தஞ்சமடைந்தது. வெறும் 5 எம்.எல்.ஏ.க்களைக் கொடுத்து 2 அமைச்சர் பதவிகளையும் வாங்கிக்கொண்டது.
அதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக என ஒவ்வொரு கட்சிகளும் தங்களது ஆதரவைத் தெரிவித்தன. முதலில் வெளியே இருந்து ஆதரவு என சொன்னாலும் விசிகவும், ஐயூஎம்எல்-லும் அமைச்சரவையில் இடம் பிடித்தது தனிக்கதை. கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே இன்று வரை வெளியே இருந்து ஆதரவு அளித்து வருவதோடு, வாண்டடாக வந்த அமைச்சர் பதவியையும் வேண்டாம் என சொல்லிவிட்டது. இதன் விளைவு அவ்வப்போது தவெக அரசை விமர்சித்து கருத்து கூறி வருகின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

தவெக அரசு அமைய நிறைய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் காங்கிரஸை தவிர யாரும் எங்களை முழு மனதுடன் ஆதரிக்கவில்லை. விசிக, கம்யூனிஸ்ட்டுகள், ஐ.யூ.எம்.எல் என அத்தனை பேரும் அவ்வபோது திமுகவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது நிலைமையோ முற்றிலுமாக திமுகவிற்கு எதிராக திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: தவெக MLA- விடம் ரூ. 35 கோடிக்கு பேரம்..! செந்தில் பாலாஜிக்கு தொடர்பு..! காவல்துறை திடுக்கிடும் தகவல்..!!
ஒருபக்கம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மதிமுக இரண்டு கட்சிகளும் பொதுக்குழுவைக் கூட்டி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியை சோசியல் மீடியாக்களில் திமுகவினர் கிழித்து தொங்கவிடுவதை அறிவாலயம் கண்டும் காணாதது போல் இருப்பது திருமாவளவனை வெறுப்படைய செய்துவிட்டது.
மற்றொருபுறம் கம்யூனிஸ்ட்களை முரசொலியில் தாறுமாறாக விமர்சித்து கட்டுரை எழுதி வருகின்றனர். அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது பத்திரிகை மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் நிலைமை தவெகவிற்கு சாதகமாக இருப்பதை உணர்ந்து கொண்ட விஜய், தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

தற்போது உள்ள இந்த கூட்டணியை ஸ்ட்ராங் செய்து இடைத்தேர்தல் வரை வெற்றிகரமாக கொண்டு செல்ல வேண்டும், அதன் பின்னர் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என வெற்றிக் கொடி கட்ட திட்டமிட்டிருக்கிறாராம் தளபதி. இந்த ஆலோசனக் கூட்டத்தின் போது “அனைவரும் என்னுடன் ஒன்றாக நில்லுங்கள். திமுக போல் அல்லாமல் உங்களுக்கான மரியாதையும் அங்கீகாரமும் தவெக கூட்டணியில் கிடைக்கும்” என உடைத்துப் பேசப்போகிறாராம்.
அதேமாதிரி, அரசு நிர்வாகரீதியாகவும் உங்கள் தரப்பு கருத்துகளை எப்போது வேண்டுமானாலும் தெரியப்படுத்தலாம் என்றும் கூறவிருக்கிறார். இந்த தோழமைக் கட்சிகளை இடைத்தேர்தலுக்குள் ஒரு `முழு கூட்டணியாக' மாற்ற வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். அதன்மூலம் தேர்தல் களத்தில் திமுகவை இன்னும் தனிமைப்படுத்தி பலவீனமாக்க வேண்டுமென நினைக்கிறார். அதற்கான காய் நகர்த்தல்தான் இந்த கூட்டம்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: #BREAKING: ஒரு MLA- வுக்கு 15 கோடி..? பேரம் பேசப்பட்ட எம்எல்ஏக்கள் யார்... யார்..? LIST எடுக்கும் தவெக தலைமை..!!