• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 24, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ட்ரம்பின் கோல்டன் கார்டு திட்டம்!! ஹெச் 1 பி விசா, க்ரீன்கார்டு முறையை மாற்றுவோம்..! அமெரிக்கா அறிவிப்பு!!

    ஹெச் 1 பி விசா, க்ரீன்கார்டு முறையை மாற்றுவோம் என்று அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவார்டு லுட்னிக் கூறி உள்ளார்.
    Author By Pandian Wed, 27 Aug 2025 09:32:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    will change h 1b visas green card system says commerce secretary lutnick

    அமெரிக்காவின் வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக், H-1B விசா முறையை "மோசடி" என்று கடுமையாக விமர்சித்திருக்கார். இந்த விசா மூலம் வெளிநாட்டினர் அமெரிக்க வேலைகளை கையிலெடுத்துக்கொள்கிறார்கள், அமெரிக்கர்களுக்கு வாய்ப்பு குறைந்துவிடுகிறது என்று அவர் சொல்கிறார். 

    இதை மட்டுமல்லாம, க்ரீன் கார்ட் முறையையும் மாற்றப் போவோம் என்று அறிவித்துள்ளார். டிரம்ப் நிர்வாகம், "கோல்டன் கார்ட்" என்ற புதிய திட்டத்தை தொடங்க உள்ளது. இதில் குறைந்தது 5 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர வாசிப்பிடம் (பெர்மனன்ட் ரெசிடன்ஸி) கொடுக்கப்படும். இது விரைவில் அமலுக்கு வரும் என்று லுட்னிக் பேட்டியில் சொல்லியிருக்கார்.

    இந்த செய்தி அமெரிக்காவின் பிரபல டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் வெளியானது. "தற்போதைய H-1B விசா ஒரு மோசடி. வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்க வேலைகளை எடுத்துக்கொள்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்கள் முதல்ல அமெரிக்கர்களை பணியமர்த்த வேண்டும். இந்த முறையை டிரம்ப் மாற்றப் போகிறார்" என்று அவர் விளக்கினார். 

    இதையும் படிங்க: இன்று முதல் கூடுதல் 25% வரி அமல்!! ட்ரம்ப் முடிவால் இந்தியா வர்த்தகத்தில் விழும் அடி!!

    க்ரீன் கார்ட் பெறுபவர்களின் சராசரி வருமானம் 66,000 டாலர், அமெரிக்கர்களின் சராசரி 75,000 டாலர் என்று சொல்லி, "நாங்கள் சிறந்தவர்களை தேர்ந்தெடுக்கும்" என்று கூறினார். இந்த திட்டம், EB-5 விசா முறையை (இதில் 800,000-1.05 மில்லியன் டாலர் முதலீட்டுக்கு க்ரீன் கார்ட்) மாற்றி, அதிக முதலீட்டுக்கு மாற்றும்.

    கூடுதல் தகவல்கள் என்ன? டிரம்ப், இந்த கோல்டன் கார்டை "டிரம்ப் கார்ட்" என்றும் அழைக்கிறார். இது க்ரீன் கார்டை விட "உயர்ந்தது" என்று சொல்கிறார். 250,000 பேர் இதற்காக காத்திருக்கிறார்கள் என்று லுட்னிக் கூறுகிறார். இது 1.25 டிரில்லியன் டாலர் வருமானம் தரலாம், அமெரிக்க கடத்தை குறைக்க உதவும். டிரம்ப் ஜனவரி 2025-ல் H-1B-ஐ ஆதரித்து, "சிறந்த திறமையானவர்களை அழைக்க வேண்டும்" என்று சொன்னாலும், முதல் டெர்மில் (2017-2021) இதை கடுமையாக கட்டுப்படுத்தினார். 

    அப்போ, "நிறுவனங்கள் குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டவர்களை அமர்த்துகிறார்கள்" என்று விமர்சித்தார். இப்போ, H-1B-ஐ லாடரி முறையிலிருந்து ஊதிய அடிப்படையிலான முறைக்கு மாற்ற உள்ளனர். அதாவது, அதிக சம்பளம் தரும் திறமையானவர்களுக்கு முன்னுரிமை.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு? இந்தியர்கள் H-1B விசாவின் 72% பெறுபவர்கள். 2023-ல் 72.3% இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. IT, டெக் துறைகளில் சுந்தர் பிச்சை, சத்ய நடெல்லா போன்றவர்கள் H-1B மூலம் வந்தவர்கள். இந்த மாற்றம், இந்திய தொழிலாளர்களுக்கு கடினமாகலாம். லாடரி முறை இல்லாமல், உயர் ஊதியம் தரும் நிறுவனங்களுக்கு மட்டும் வாய்ப்பு. 

    க்ரீன் கார்ட் வெயிடிங் லிஸ்ட் இந்தியர்களுக்கு 10-20 வருஷம், இது மேலும் சிக்கலாகலாம். டிரம்ப் நிர்வாகம், "அமெரிக்கர்களுக்கு முதலில் வேலை" என்று வலியுறுத்துகிறது. ஆனால், டெக் நிறுவனங்கள் H-1B இன்றி இல்லை என்று புகார் செய்கின்றன.

    இந்த திட்டத்தின் பின்னணி என்ன? டிரம்ப், பிப்ரவரி 2025-ல் இதை அறிவித்தார். ஏப்ரல் மாதம் முதல் விண்ணப்பங்கள் தொடங்கும் என்று சொன்னார். லுட்னிக், "இது அமெரிக்காவை வலுப்படுத்தும்" என்று பேசுகிறார். ஆனால், விமர்சகர்கள், "இது செல்வந்தர்களுக்கு மட்டும், திறமையை பணத்தால் அளவிடுகிறது" என்று கூறுகின்றனர். 

    காங்கிரஸ் அனுமதி தேவை என்று சட்ட வல்லுநர்கள் சொல்கிறார்கள். உலக அளவில், போர்ச்சுகல், கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் "கோல்டன் விசா" திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. அமெரிக்காவும் EB-5 மூலம் செய்தாலும், இது அதிக விலை.

    இந்த மாற்றம் அமெரிக்க குடியேற்றக் கொள்கையை பெரிய அளவில் மாற்றும். இந்தியர்கள், IT தொழிலாளர்கள் கவனமா இருக்கணும். டிரம்ப், "சிறந்தவர்களை அழைக்கிறோம்" என்றாலும், இது அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும். கோல்டன் கார்ட், செல்வந்தர்களுக்கு வழி, ஆனா சாதாரண திறமையானவர்களுக்கு சவால். இந்தியா, 140 கோடி மக்களோட திறமையை உலகுக்கு காட்டும், ஆனா அமெரிக்காவின் இந்த மாற்றம் நம்ம IT ஏற்றுமதியை பாதிக்கலாம்.

    இதையும் படிங்க: அமெரிக்காவின் அழுத்தத்தை மோடி சமாளிச்சிருவாரு!! அவருக்கு வல்லமை இருக்கு!! பிஜி பிரதமர் பாராட்டு..

    மேலும் படிங்க
    “நிர்மலா சீதாராமன் முதல்வர், இபிஎஸ், விஜய் துணை முதல்வர்” - அமித் ஷாவின் அதிரடி கணக்கு - முக்கிய அரசியல் புள்ளி தகவல்...!

    “நிர்மலா சீதாராமன் முதல்வர், இபிஎஸ், விஜய் துணை முதல்வர்” - அமித் ஷாவின் அதிரடி கணக்கு - முக்கிய அரசியல் புள்ளி தகவல்...!

    அரசியல்
    சமையலறை பட்ஜெட்டில் கைவைத்த

    சமையலறை பட்ஜெட்டில் கைவைத்த 'தக்காளி'..!! விலை கடும் உயர்வு..! இல்லத்தரசிகள் வேதனை..!!

    தமிழ்நாடு
    அமெரிக்க-சீன அதிபர்கள் தென் கொரியாவில் சந்திப்பு..!! வர்த்தகப் போர் முடிவுக்கு வழிவகுக்குமா..?

    அமெரிக்க-சீன அதிபர்கள் தென் கொரியாவில் சந்திப்பு..!! வர்த்தகப் போர் முடிவுக்கு வழிவகுக்குமா..?

    உலகம்
    கதி கலங்கிப்போன தமிழகத்தின் கடைக்கோடி... கனமழையால் கதறும் கன்னியாகுமரி மக்கள்...!

    கதி கலங்கிப்போன தமிழகத்தின் கடைக்கோடி... கனமழையால் கதறும் கன்னியாகுமரி மக்கள்...!

    தமிழ்நாடு
    ஒகேனக்கல் நீர்வரத்து கிடுகிடுவென உயர்வு... 4வது நாளாக வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

    ஒகேனக்கல் நீர்வரத்து கிடுகிடுவென உயர்வு... 4வது நாளாக வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (24-10-2025)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று காதல் விஷயத்தில் கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (24-10-2025)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று காதல் விஷயத்தில் கவனம் தேவை..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    “நிர்மலா சீதாராமன் முதல்வர், இபிஎஸ், விஜய் துணை முதல்வர்” - அமித் ஷாவின் அதிரடி கணக்கு - முக்கிய அரசியல் புள்ளி தகவல்...!

    “நிர்மலா சீதாராமன் முதல்வர், இபிஎஸ், விஜய் துணை முதல்வர்” - அமித் ஷாவின் அதிரடி கணக்கு - முக்கிய அரசியல் புள்ளி தகவல்...!

    அரசியல்
    சமையலறை பட்ஜெட்டில் கைவைத்த 'தக்காளி'..!! விலை கடும் உயர்வு..! இல்லத்தரசிகள் வேதனை..!!

    சமையலறை பட்ஜெட்டில் கைவைத்த 'தக்காளி'..!! விலை கடும் உயர்வு..! இல்லத்தரசிகள் வேதனை..!!

    தமிழ்நாடு
    அமெரிக்க-சீன அதிபர்கள் தென் கொரியாவில் சந்திப்பு..!! வர்த்தகப் போர் முடிவுக்கு வழிவகுக்குமா..?

    அமெரிக்க-சீன அதிபர்கள் தென் கொரியாவில் சந்திப்பு..!! வர்த்தகப் போர் முடிவுக்கு வழிவகுக்குமா..?

    உலகம்
    கதி கலங்கிப்போன தமிழகத்தின் கடைக்கோடி... கனமழையால் கதறும் கன்னியாகுமரி மக்கள்...!

    கதி கலங்கிப்போன தமிழகத்தின் கடைக்கோடி... கனமழையால் கதறும் கன்னியாகுமரி மக்கள்...!

    தமிழ்நாடு
    ஒகேனக்கல் நீர்வரத்து கிடுகிடுவென உயர்வு... 4வது நாளாக வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

    ஒகேனக்கல் நீர்வரத்து கிடுகிடுவென உயர்வு... 4வது நாளாக வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    அதிகாலையில் பயங்கரம்...!! அலறித்துடித்த பயணிகள்... பற்றி எரிந்த வால்வோ பேருந்து....23 பேர் உடல் கருகி பலி...!

    அதிகாலையில் பயங்கரம்...!! அலறித்துடித்த பயணிகள்... பற்றி எரிந்த வால்வோ பேருந்து....23 பேர் உடல் கருகி பலி...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share