தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் காதலிக்க மறுத்த பெண் கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட பெண் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார்.
தேங்காய்மரத்துப்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி என்ற 31 வயதான நபர் நகைக்கடையில் பணிபுரிந்து வந்த பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். காதலிக்க மறுத்ததால் திருமணம் செய்து கொள்வோம் எனக்கூறியும், அப்பெண் மறுத்த நிலையில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். தருமபுரி நகர பேருந்து நிலையத்திற்கு வரவழைத்து மீண்டும் காதலிக்கச் சொல்லி டார்ச்சர் கொடுத்த சின்னசாமி, அந்த பெண் காதலிக்க மறுத்ததால்கத்தியால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பெண்ணை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக அருகே இருந்த தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: சூதானமா இருங்க மக்களே...!! - தூத்துக்குடியில் அதிபயங்கரம்... வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...!