விளாத்திகுளம் அருகே மிட்டா வடமலாபுரம் கிராமத்தில் காற்றுக்காக வீட்டில் கதவைத் திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி குத்தி கொலை. மூதாட்டியின் கழுத்தில் கிடந்த பத்து சவரன் தங்க நகை கொள்ளை.
விளாத்திகுளம் அருகே காடல்குடி மிட்டா வடமலாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் திருக்கண்ணன். இவரது மனைவி கலாவதி. வயது 62. இவர் நேற்று இரவு வழக்கம் போல வீட்டின் வாசலில் திருக்கண்ணன் படுத்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அவரது மனைவி கலாவதி வீட்டின் உள்பகுதியில் கதவை திறந்து வைத்து தூங்கி உள்ளார்.
இந்நிலையில் இன்று ஜூலை 7 ஆம் தேதி அதிகாலையில் திருக்கண்ணன் எழுந்து தண்ணீர் மோட்டார் போடுவதற்காக தனது மனைவியை எழுப்பி உள்ளார். அப்போது அவர் கழுத்தில் குத்து பட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொலையான கலாவதியின் கழுத்தில் கத்தி அல்லது ஸ்குரு டிரைவர் போன்ற கூர்மையான ஆயுதம் மூலம் குத்தப்பட்டு கழுத்தில் கிடந்த 10 சவரன் தங்கச் செயின் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் மற்றும் போலீசார் பார்வையிட்டனர்.
விரல் ரேகை பிரிவு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு
தடயங்களை கைப்பற்றி கொலையாளிகள் குறித்த விசாரணையை தீவிர படுத்தி உள்ளனர்.
காடல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தலையை துண்டித்து கொடூரக் கொலை..! 3 பேர் அதிரடி ARREST..! நெல்லையை உலுக்கிய கோர்ச் சம்பவம்..!!