இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி சர்வதேச டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும், 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி கோப்பையை வென்றுள்ளது.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக 61 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 50 ரன்களும் விளாசினர். நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அதிரடியாக விளையாடியது. அந்த அணி வெறும் 18 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 195 ரன்கள் எடுத்து எளிதாக இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி: 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி!
5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில், முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இந்திய அணி ஆரம்பத்திலேயே தொடரைக் கைப்பற்றியிருந்தது. எனினும், கடைசி இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று 3-2 என தொடரை நிறைவு செய்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியா அதிரடி பேட்டிங்: நியூசிலாந்துக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்!