நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில், இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயரின் அதிரடி அரைசதங்களின் துணையோடு இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்து, நியூசிலாந்து அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டம் இன்று விறுவிறுப்பாகத் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இஷான் கிஷன் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களத்தில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடிய ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 50 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும், இந்த இருவரின் அரைசதங்களின் பலத்தால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.
இதையும் படிங்க: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா: முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!
நியூசிலாந்து அணித் தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய ஆடம் மில்னே முக்கியத் தருணங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளைச் சாய்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி தனது பேட்டிங்கைத் தொடங்குகிறது.
இதையும் படிங்க: Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!