2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இதனிடையே இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. தற்போது நிலைமை சரியானதை அடுத்து எஞ்சிய போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. 58 ஆவது லீக் ஆட்டத்தில் ஆர் சி பி அணியும் கொல்கத்தா அணியும் மோதுகிறது.

ஆர் சி பி அணியை பொறுத்தவரை புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 11 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளுடன் அந்த அணி உள்ளது. எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். கொல்கத்தா அணியை பொறுத்தவரை தற்போது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார்கள். எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
இதையும் படிங்க: 2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும். இந்த நிலையில் இரு அணிகளும் இதுவரை 35 முறை மோதி இருக்கிறார்கள். இதில் ஆர்சிபி அணி 15 முறையும், கொல்கத்தா அணி 20 முறையும் வெற்றி பெற்று இருக்கிறது. கடைசியாக இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணி வென்றது. இந்த நிலையில் பெங்களூருவில் கனமழை பெய்து வருகிறது. தினமும் மாலை நேரத்தில் மழை கொட்டி தீர்ப்பதால் நேற்று பயிற்சி செய்யக்கூட வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மைதானத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததால் அதில் ஆர்சிபி வீரர் டிம் டேவிட் ஓடி சென்று விளையாடி குழந்தை போல் நேரத்தை செலவழித்தார்கள். இதனால் நாளை சனிக்கிழமையும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை வருகிறது. இதன் காரணமாக பெங்களூருவிலும் மழை தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .இதனால் ஆர் சி பி, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்.. சென்னையில் போட்டி உண்டா.? பிசிசிஐ குஷி அறிவிப்பு!