விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளராக நுழைந்த டிடிஎஃப் வாசன், வந்த முதல் நாளே இன்று வெளியான ப்ரோமோவில் உடல் ரீதியான மோதலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக ஜேசன் இருப்பதாக தெரிகிறது.
காமன் மேன் நிகழ்ச்சியில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஜேசன், தன்னை சினிமாவில் ரகுவரன் போலவே நினைத்துக் கொண்டு, அவரது பாணியில் பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று தனது பெட் பகுதியில் மற்றவர்களின் செருப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து கோபமடைந்த அவர், “இனி யாருடைய செருப்பாவது இங்கே வந்தால் வெளியே பறந்துடும்” என்று மிரட்டியுள்ளார்.
இதைக் கேட்டு அன்ஷிதா கடுமையாக கத்தியும், தன்யாவும் எதிர்ப்பு தெரிவித்தும் உள்ளனர். வீட்டில் உள்ள பலர் ஜேசனைச் சுற்றி நின்று, “நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இப்படி மிரட்டலாமா?” என்று கேள்வி எழுப்பியபோதும், ஜேசன் “நான் இப்படித்தான்” என்று உறுதியாக இருந்தார். இந்த பதற்றமான சூழலில் முதலில் அமைதியாக இருந்த டிடிஎஃப் வாசன், ஒரு கட்டத்தில் கைகலப்பில் இறங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டைலிஷ் லுக்கில் அதிதி ராவ்..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

இருவரையும் மற்ற போட்டியாளர்கள் பிடித்துப் பிரித்துள்ளனர். இந்த ப்ரோமோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. வெளியில் டிடிஎஃப் வாசனுக்கு ஏற்கனவே பல வழக்குகள் இருந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த உடனேயே புதிய பிரச்சினையில் சிக்கியுள்ளார். இருப்பினும், ஜேசனின் எதிர்ப்புப் போக்கு காரணமாக வாசனுக்கு வீட்டில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
ஜேசன் யாருடைய கருத்தையும் ஏற்காமல் எதிர்த்துப் பேசி வருவதால், அவர் மீதான கோபம் அதிகரித்து வருகிறது.இந்த வாரம் ரெட் கார்டு யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அடிதடி காரணமாக இன்றே ரெட் கார்டு வழங்கப்படலாம் என்றும், அல்லது ஹோஸ்ட் விஜய் சேதுபதி இந்த விவகாரத்தைப் பஞ்சாயத்து செய்து தீர்ப்பார் என்றும் ஊகங்கள் பரவி வருகின்றன.
டிடிஎஃப் வாசன் நுழைந்த அடுத்த நாளே நிகழ்ச்சி சூடாகிவிட்ட நிலையில், இனி அடிதடியுடன் தொடருமா அல்லது ஜாலியான சூழல் உருவாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
இதையும் படிங்க: ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!! ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்..!