இந்த வாரம் தமிழில் கிட்டத்தட்ட ஐந்து படங்கள் வெளியாக இருக்கிறது. இதில் அனைத்தும் குடும்ப செண்டிமெண்ட் படம் என்பதால் எந்த படம் வசூலில் சாதனை படைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

3BHK - இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், சைத்ரா, மீதா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் "3bhk". ஒரு நடுத்தர குடும்பத்தில் வீடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை காண்பிக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளது. வீடு கட்டுவதற்காக போராடி தோற்றுப்போகும் அப்பா சரத்குமார், அப்பா கனவை நினைவாக்க போராடும் சித்தார்த், ஆனால் அவருக்கு படிப்பு கைகொடுக்காமல் போகவே மிகவும் போராடி முயற்சி செய்து கடைசியில் வீடு வாங்குவாரா..? மாட்டாரா..? என்பதை ட்ரெய்லரின் முக்கியமாக காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ட்ரெய்லரில் சரத்குமார், "வீடு தானே நமக்கு மரியாதை கௌரவம் எல்லாம்" என்று சொல்வது எல்லாம் அல்டிமேட்டாக உள்ளது. ஜூலை 4-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

அஃகேனம் - தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் 'அஃகேனம்'. ஏ&பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் அருண்பாண்டியன் தயாரிப்பில் இயக்குனர் உதய் இயக்கத்தில் பரத் வீரராகவன் இசையமைப்பில் உருவான இப்படத்தில் பிரவீன் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: 'கண்ணப்பா' படத்துக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா..! திரையுலகை ஆட்டம் காண வைத்த பக்தி படம்..!

குயிலி - வி.வி.அருண்குமார் தயாரிப்பில் முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் 'குயிலி'. அறிமுக இயக்குனர் முருகசாமி இயக்கிய 'குயிலி' படத்தில் லிஸி ஆண்டனி, ரவிசா, தஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன் மற்றும் ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீன் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜூ ஸ்மித் இசையமைத்துள்ளார். மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உயிர்வாழவும் ஒரு தாய் போராடும் கதையாக இப்படம் பார்க்கப்படுகிறது. இந்த படம் தற்பொழுது வெளியாகியுள்ளது.

பறந்து போ - இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடக்க அவருடன் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட அனைவரும் நடித்து வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் 'பறந்து போ'. இந்த படத்தின் காட்சிகளை பார்க்கும் பொழுது தந்தை மற்றும் மகனுக்குண்டான படமாக இப்படம் பார்க்கப்படுகிறது.

ஃபீனிக்ஸ் - விஜய் சேதுபதியின் மகனான சூர்யா தற்பொழுது பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையமைப்பில் 'ஃபீனிக்ஸ்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

இப்படி இருக்க இந்த வாரம் முழுவதும் ஒரே நாளில் ஐந்து படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: கோமாவில் இருந்து மீண்ட பிரபல சீரியல் நடிகை... கணவர், குழந்தையை மறந்த அவலம்..!