இதுவரை தமிழில் ராமாயணம் மகாபாரதம் போன்ற வரலாற்று சிறப்புகளை போற்றும் படைப்புகளை பார்த்து இருப்போம். ஆனால் அதனை தொடர்ந்து வருகிறது "கண்ணப்பா திரைப்படம்". இயக்குனர் லிங்குசாமி மகாபாரதத்தை இயக்க உள்ளதாக கூறிய நிலையில் இந்த படம் பெரிதும் வரவேற்புள்ளதாக உள்ளது.

இயக்குனர் லிங்குசாமி மகாபாரதத்தை இயக்க உள்ளதாக கூறிய நிலையில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்மிக படம் தான் "கண்ணப்பா". காரணம் ரூ.100 கோடி பட்ஜெட்டில், ஏ.வி.ஏ என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், ஸ்டீபன் தேவாசி இசையில், பிரபாஸ், மோகன்லால், விஷ்ணு மஞ்சு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிக்க தயாராகி கடந்த ஆகஸ்ட் 18, 2023 அன்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்பொழுது முழுப்படமாக்கப்பட்டு உள்ளது "கண்ணப்பா" திரைப்படம்.
இதையும் படிங்க: நாளை ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ்..! குழப்பத்தில் சினிமா ரசிகர்கள்..!

இப்படத்தில், திண்ணு கண்ணப்பர் கதாபாத்தில் விஷ்ணு மஞ்சுவும், இளம் தின்னடு கதாபாத்திரத்தில் அவ்ராம் பக்த மஞ்சுவும், மகாதேவ சாஸ்திரி கதாபாத்திரத்தில் மோகன் பாபுவும், நாதநாடுடாக கதாபாத்திரத்தில் ஆர்.சரத்குமார், பன்னகா கதாபாத்திரத்தில் மதுவும், கம்படு கதாபாத்திரத்தில் முகேஷ் ரிஷியும், கவ்வராஜா கதாபாத்திரத்தில் பிரம்மஜியும், வீரா கதாபாத்திரத்தில் கருணாஸும், பிலாகா கதாபாத்திரத்தில் பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இத்திரைப்படம் ஜூன் மாதம் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் அதிரடியாக வெளியானது. இந்த சூழலில், கலவையான விமர்சனங்கள் வந்தபோதும் இப்படத்திற்கு ஓரளவு வசூல் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஹிந்தி சாட்லைட் உரிமம் மட்டும் ரூ.20 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இதனை பற்றி தெரிந்துகொண்ட தெலுங்கு திரையுலகத்தினர் ஆச்சர்யத்தில் உறைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மிரட்டலாக அட்டகாசமாக வெளியானது கண்ணப்பா படத்தின் மேக்கிங் வீடியோ..! இணையத்தில் வைரல்..!