இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவ விரும்பினாலும், அதைச் செய்ய அடிக்கடி பயம் ஏற்படுகிறது. காரணம், அவர்களின் நற்செயல்களை முறையாக புரிந்து கொள்ளாமல், சமூகத்தில் தவறான விளக்கங்களுடன் பரப்பப்படுவதால், அந்த உதவிகள் எதிர்மறையாகவே தோன்றுகின்றன. இது சமீபத்தில் அதிகமாக பேசப்படும் நிகழ்வாக மாறியுள்ளது. அதன்படி பிரபல தொலைக்காட்சி நகைச்சுவை நடக்கும் மற்றும் சமூக சேவையாளரான KPY பாலாவின் பெயரைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை.
இப்படியாக காமெடி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருமானம் ஈட்டும் பாலா, அந்த பணத்தில் ஒரு பகுதியை சமூக சேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார். இது மிகப்பெரும் பாராட்டுக்குரிய விஷயமாகும். சமூதாயத்தின் பல தரப்பினருக்கும் உதவி செய்யும் நோக்கில், மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர உதவிகள் வழங்குவது போன்ற செயல்களில் அவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இதனைப் பலரும் பாராட்டினாலும், சிலர் அதனை விமர்சனக்குரியதாக மாற்றியுள்ளனர். சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஒரே மாதிரியான புகார்கள் எழும்படுவது, பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்படி இருக்க சமீபத்தில், பாலா வழங்கிய ஆம்புலன்ஸ் தொடர்பாக சில குழுக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அந்த ஆம்புலன்ஸ் பழையது, ஓட்ட முடியாத நிலைமைக்கு ஆளானது என்றும், வெறும் புகாராக இல்லாமல் இது குறித்து வீடியோக்கள், படங்கள் என சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. பாலா ஒரு புதிய ஆம்புலன்ஸ் வாங்கியதாக கூறிய நிலையில், 1990 மற்றும் 2016 ஆண்டு மாடல்களான இரண்டு வாகனங்களே வழங்கப்பட்டுள்ளன என்பது பலரின் கவனத்தை ஈர்த்தது. அத்துடன், அந்த வாகனங்கள் இரண்டிலும் வண்டி உரிமையாளரின் பெயர் மாற்றம் நடைபெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். சட்டப்படி வாகன உரிமம் மாற்றப்பட வேண்டும் என்பதையும், உண்மையாகவே பாலா அந்த வாகனங்களை வாங்கி வழங்கியிருந்தால், உரிமம் மாற்றம் நடந்திருக்க வேண்டும் என்பதையும் பலர் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் மனதில் இப்படி வலியா..! கல்வி விழாவில் அவரது பேச்சால் கலங்கிய மாணவர்கள்..!

இந்த சர்ச்சையை மையமாக கொண்டு, பிரபல நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆதவன், ஒரு தொலைக்காட்சி பேட்டியில், “பாலா ஒரு நல்ல மனிதர், அவரது மனநிலை மிகவும் நேர்மையானது. அவனுக்கு எதிராக வரும் வதந்திகளுக்கு ஆதாரங்கள் இல்லை. ஆனால், அவர் கொடுத்த ஆம்புலன்ஸ் பழையதா, நம்முடைய கண்களுக்கு தெரிகிறது,” என்றார். மேலும் அவர், “நமக்கு கேள்விகள் இருக்கலாம். அதற்கு பதிலளிக்கும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்கும் ஒருவர், தனது செயல்களுக்கு நிச்சயமாக தெளிவான விளக்கங்களை அளிக்க வேண்டும்,” என்றார்.
இந்தக் கருத்துக்கள் பலராலும் பகிரப்பட்டு, சமூக வலைதளங்களில் விவாதங்களை தூண்டியுள்ளன. இந்த சர்ச்சைகள் குறித்துப் பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் கருத்துகள் பரவியுள்ளன. ஆனால் இதுவரை பாலா தன்னுடைய தனிப்பட்ட சமூக ஊடகங்களில் இதுபற்றிய தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை. இது அவரின் மீது ஏற்பட்டுள்ள விமர்சனங்களை மேலும் தீவிரமாக்குகிறது. மிக விரைவில், அவர் இந்த புகார்களுக்கு நேரடியாக பதிலளித்து, அந்த வாகனங்களை எப்படி, எங்கு வாங்கினார், அதன் நன்கு சான்றுகள் மற்றும் ஆவணங்களை வெளியிடுவாரா என்பதையே பலரும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இது போன்ற நிகழ்வுகள், நாம் ஒருவர் மீது நம்பிக்கை வைக்கும்போது, அதற்கான ஆதாரங்களும், பொறுப்பும் முக்கியமென்பதைக் கூறுகின்றன. ஒருவர் நல்லநோக்கத்துடன் செய்த செயல்கள் கூட, போதுமான தெளிவும் நிரூபணங்களும் இல்லாதபோது சந்தேகங்களுக்கு இடமளிக்கக்கூடும்.
அதே நேரத்தில், ஒருவரை முழுமையாக தவறாக சித்தரிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆகவே KPY பாலா ஒரு நல்ல முயற்சியை எடுத்துள்ளார் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவர் செய்த உதவிகள், இன்னும் தெளிவாக மக்களுக்கு தெரிய வர வேண்டும். சமூக சேவை என்பது மட்டும் போதாது; அதை செய்யும் முறையும், அதன் பின்விளைவுகளும் மக்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், நம்மும் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை, அதற்கான ஆதாரங்களை பரிசீலிக்காமல் நம்புவது தவறு. நாம் கேட்கும் கேள்விகள் நியாயமானவையாக இருந்தாலும், அவற்றை முன்வைக்கும் விதம், ஒருவரின் நேர்மையை முற்றிலும் கேள்விக் குள்ளாக்கும் வகையில் இருக்கக்கூடாது. எந்த ஒரு நபரும் பிழையற்றவரல்ல.

ஆனால் அவர் செய்கிற முயற்சி நல்லதென்றால், அதனை நம்மால் இயன்ற வரையில் உறுதிப்படுத்தி, சந்தேகம் இருப்பின் நேர்மையான கேள்விகளை கேட்டு விளக்கம் பெறுவதுதான் சமூகத்தின் தரநிலையை உயர்த்தும் வழி.
நல்ல செயலைத் தவறாக புரிந்து கொள்வது போலப் பெரிய தவறு எதுவும் இல்லை.
இதையும் படிங்க: ட்ரெண்டிங் உடையில் கலக்கும் நடிகை மாளவிகா மோகனன்..!