இந்திய திரையுலகில் பல ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்து வரும் நடிகைகளில் ஸ்ரேயா சரணும் ஒருவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ஸ்ரேயா சரண், தனது 25 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: இலங்கையில் இளசுகளை திணறவிடும் சிவாங்கி கிருஷ்ணகுமார்..!! வைரலாகும் அழகிய போட்டோஸ்..!

இந்த முக்கியமான மைல்கல்லை முன்னிட்டு நடைபெற்ற சைமா விருது விழாவில் நடிகைக்கு சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாக சைமா விருதுகள் இருந்து வருகிறது.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

காலப்போக்கில் இந்த விழா இந்திய சினிமாவின் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் முக்கியமான நிகழ்வாகவும் மாறியுள்ளது..

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற சைமா விருது விழாவிலும் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். விருது பெற்ற நட்சத்திரங்கள் மட்டுமின்றி, விழாவில் பங்கேற்ற பிரபலங்களின் ஆடை அலங்காரம் மற்றும் அவர்களின் மேடை தோற்றமும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியது. இந்த விழாவில் நடிகை ஸ்ரேயா சரணுக்கு வழங்கப்பட்ட சிறப்பு கௌரவம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!