தமிழ் சின்னத்திரை உலகில் பல ஆண்டுகளாக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வரும் நடிகைகளில் ஒருவர் சுஜிதா.

குழந்தை நட்சத்திரமாக தனது கலைப் பயணத்தை தொடங்கி, இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ள அவர், தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிப்பு, எளிமையான அணுகுமுறை மற்றும் குடும்ப ரசிகர்களை கவரும் கதாபாத்திரங்கள் மூலம் சுஜிதா தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான ரைசா வில்சன்..!! சினிமாவை தாண்டி கிளாமரில் கவனம் ஈர்க்கும் நடிகை..!

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் சுஜிதா, தற்போது சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கை தருணங்கள், போட்டோஷூட் புகைப்படங்கள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் சிறப்பு தருணங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அவரது ஒவ்வொரு பதிவுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கம்.

இந்த நிலையில், சுஜிதா தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

பாரம்பரியமான சேலை அணிந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில் சுஜிதாவின் எளிமையான தோற்றமும், அழகான புன்னகையும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பொதுவாகவே சுஜிதா பாரம்பரிய உடைகளில் தோன்றும் புகைப்படங்களை பகிரும்போது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள சேலை புகைப்படங்களும் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளன. நவீன உடைகள் மட்டுமின்றி, பாரம்பரிய ஆடைகளிலும் தனது அழகையும் ஸ்டைலையும் வெளிப்படுத்தும் விதம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: திருவண்ணாமலைக்கு கூட்டம் கூட்டமாக செல்லும் பக்தர்கள்..!! காரணம் யாரு.. நான் தான்.. ஆன்மிக அனுபவத்தை பகிர்ந்த இளையராஜா..!