கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தில் நடித்துள்ள நடிகை தாரா சுதாரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் இணைந்திருப்பதால், படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

குறிப்பாக படத்தின் நாயகிகளாக நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பிரபல நடிகைகள் இடம்பெற்றுள்ள நிலையில், இளம் நடிகையான தாரா சுதாரியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: சீரியலில் இருந்து திடீர் பிரேக்.. வெளிநாட்டில் குதூகலம்..!! போட்டோ ஷூட்டில் பிஸியாக இருக்கும் ஜனனி அசோக்குமார்..!

இந்த சூழலில், ‘டாக்சிக்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தாரா சுதாரியா அணிந்திருந்த ஆடையில் மேற்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கேஜிஎஃப்’ திரைப்படத் தொடரின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு யாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் முக்கியமான படமாக ‘டாக்சிக்’ பார்க்கப்படுகிறது.

யாஷின் முந்தைய படங்களின் வெற்றியும், அவருக்குக் கிடைத்துள்ள பான்-இந்திய அளவிலான ரசிகர் பட்டாளமும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

அதோடு, படத்தில் இணைந்திருக்கும் நடிகர்களின் பட்டியலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

யாஷுடன் தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், நயன்தாரா, ஹுமா குரேஷி, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதனால் ஆக்ஷன் மட்டுமின்றி, கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகையின் அக்குளை அடிக்கடி மோப்பம் பிடிக்கும் நடிகர்..!! கணவர் சைத் தர்பாரின் வித்தியாசமான பழக்கம்.. வெளிப்படையாக சொன்ன கௌஹர் கான்..!