இந்திய திரைப்பட உலகில் தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆலியா பட் திகழ்கிறார்.

பாலிவுட்டில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வருவதுடன், சர்வதேச திரைப்படத்துறையிலும் தனது தடத்தை பதித்தவர். 'கங்கூபாய்', 'ராக்கி கி ராணி', ‘RRR’ போன்ற பல வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

தற்போது ஆலியா பட் அவரது நடிப்பில் உருவாகி வரும் இரண்டு முக்கியமான படங்களான ‘ஆல்ஃபா’ மற்றும் ‘லவ் அண்ட் வார்’ மூலம் மீண்டும் ரசிகர்களை கவரத் தயாராக உள்ளார்.
இதையும் படிங்க: நாளை தியேட்டர்ல 'எட்டு'..! ஓடிடி-ல 'பதினொன்னு'..! 'சூப்பர் மேன்' முதல் '3 ரோஸஸ்' வரை OTT-ல ரிலீஸ்..!

இதற்கிடையில், ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நவீன ஃபேஷன் உடைகளில் எடுத்த இந்த ஸ்டன்னிங் புகைப்படங்களில் ஆலியா கவர்ச்சியான போஸ்களுடன் கம்பீரமாக திகழ்கிறார். அவருடைய ஹாட் லுக்கை காண ரசிகர்கள் வெகுவாக குவிந்துள்ளனர்.

சில மணி நேரங்களுக்குள் இந்த புகைப்படங்கள் லட்சக்கணக்கான லைக்குகளையும் ஆயிரக்கணக்கில் கமெண்ட்களையும் பெற்றுள்ளது.

பொதுவாக, ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபேஷன், திரைப்பட ஷூட்டிங் அப்டேட்ஸ், குடும்ப புகைப்படங்கள் போன்றவற்றைப் பகிர்ந்து வருபவர்.
இதையும் படிங்க: அனுபமா படத்துக்கும் ஆப்பு..! நாளை வெளியாக இருந்த 'லாக்டவுன்' மீண்டும் ஒத்திவைப்பு..!