தமிழ் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் அதிரடியான ஆர்வத்தை கொண்ட பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ என்றால் அது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ் பார்வையாளர்களிடையே இந்த நிகழ்ச்சி ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரங்ககளில், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன், பரபரப்புடன் அதை பின்தொடர்கிறார்கள் என்பது அனைவருக்கும் அறிந்த உண்மை. இப்படி இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய அம்சம் என பார்த்தால், 100 நாட்கள் 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், வித்தியாசமான டாஸ்க்குகள், மிகப் பெரிய வீடு, அதினுல் இருக்கும் நம்பிக்கையற்ற நிமிடங்களும் தான்.
வெளியே உலகத்துடனான தொடர்பு சுத்தமாக இல்லாமல், ஒரே வீட்டில் பலரும் சேர்ந்து வாழும் சூழ்நிலையில் இருக்கும் பொழுது அனைவரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது, சின்னத்திரை பார்வையாளர்களுக்கு ஒரு தனி ருசியாகவே உள்ளது. அதுமட்டுமா.. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த சீசன்களில் கமல்ஹாசன் தொகுப்பாளராக நிகழ்ச்சியின் புகழை உயர்த்தினார். ஆனால், பிக்பாஸ் சீசன் 8-ல், கமல்ஹாசனுக்கு பதிலாக, விஜய் சேதுபதி தொகுப்பாளராக நிகழ்ச்சியை அழகாக நகர்த்தினார். அவரது நடை, ப்ரெசென்டேஷன், அதிரடியான பேச்சு, நேர்மையாக அணுகும் விதம் என அனைத்தும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படியாக பிக்பாஸ் 8 வெற்றிகரமாக முடிந்த நிலையில், முத்துக்குமரன் அந்த சீசனின் வெற்றியாளராக தேர்வாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். முத்துக்குமரனின் பயணம், அவரது எளிமையும், உண்மையான விளக்கங்களும், அவரது ஆடம்பரமற்ற நடத்தை, இவை அனைத்தும் அவரை வெற்றியாளராக மாற்றியது. இந்த நிலையில், பிக்பாஸ் ரசிகர்களிடம் இருந்து வாடிக்கையான கேள்வி ஒன்று எழுந்துள்ளது. அதன்படி, அடுத்த சீசன் எப்போது? யார் யார் பங்கேற்கிறார்கள்? என அனைவரும் கேட்டு வருகின்றனர். அதற்கான ஒரு முக்கியமான அதிகாரப்பூர்வ தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதன்படி, பிக்பாஸ் சீசன் 9 இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கான புதிய போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளனவாம். பிக்பாஸ் வீட்டில் இடம் பெறவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தற்பொழுது நடந்து வருகின்றன. ஏற்கனவே சில முக்கியமான சின்னத்திரை பிரபலங்கள், யூடியூப் பிரபலங்கள் மற்றும் சில குறும்பட நடிகர்கள் என அனைவரும் இந்நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனவாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த சீசனில் மிக சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே, இம்முறையும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தொடரப்போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில், ரசிகர்கள் உற்சாகமாகக் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: என்ன மக்களே பிக்பாஸ் போலாமா..! அதிரடி அறிவிப்பு கொடுத்த தொலைக்காட்சி நிறுவனம்..!
கடந்த சீசனில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த பிக்பாஸ் வீடு, டாஸ்க் வடிவமைப்புகள், வீட்டு உறுப்பினர்களுக்கிடையேயான உறவுகள், சண்டைகள், பாசம், துரோகங்கள், இவை அனைத்தும் இன்னும் பரபரப்பாக, புதிய பாணியில் வரவிருக்கின்றன என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளாக, பிக்பாஸ் நிகழ்ச்சி வெறும் சின்னத்திரை நிகழ்ச்சியாக இல்லாமல், ஒரு சமூகக் கலாச்சாரம் போல மாறி விட்டது. இது ஒரு டிரெண்ட், மீம்ஸ், டிஸ்கஷன், சமூக ஊடக கலாச்சாரத்தின் ஓர் பகுதியாக மாறியுள்ளது. இதனால் தான், பிக்பாஸ் தொடங்கும் முன்னரே, ரசிகர்கள் போட்டியாளர்களை யார் யார் என எதிர்பார்த்து வருகின்றனர். பிக்பாஸ் 9 குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. பிக்பாஸ் 9 சீசனுக்கான முதல் புரோமோ எப்போது வெளியாகும் என்பது பற்றியதற்கும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், பிக்பாஸ் 9 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை, ரசிகர்களுக்கு இது ஒரு பண்டிகையை எதிர்பார்ப்பது போலவே உள்ளது. முன்னாள் போட்டியாளர்கள், புது வரவுகள், புது பரிமாணங்கள் கொண்ட ஒரு முழுமையான பிக்பாஸ் 9-ற்கான அனுபவம், இந்த வருடம் செப்டம்பரில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
இதையும் படிங்க: கல்யாணம் செய்ய தடையாக இருப்பது இது தான்..! நடிகை மிருணாள் தாகூரின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!