தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பின் அடையாளமாக விளங்கும் நடிகர் விமல், தனது புதிய முயற்சியால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். “பசங்க” படத்தின் மூலம் அறிமுகமான விமல், அதன் பின் “களவாணி”, “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “கலகலப்பு”, “எத்தனையோ பேருக்கு ஆசை”, “மன்னர் வகையறா” போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அவரது இயல்பான நடிப்பு, கிராமத்து பையனின் வெளிப்பாடு, நகைச்சுவையுடன் கலந்த உண்மையான உணர்ச்சி ஆகியவை அவரை ரசிகர்களின் இதயத்தில் நிலையான இடம் பெற்ற நடிகராக மாற்றியது. இப்படி இருக்க சில கால இடைவெளிக்குப் பிறகு, விமல் நடித்த “சார்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அந்தப் படம் அவரை மீண்டும் முக்கிய கதாநாயகர்களின் பட்டியலில் சேர்த்தது. அதன் வெற்றிக்குப் பிறகு, விமல் தற்போது சில புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.. அதில் முக்கியமானது “மகாசேனா”. இந்தப் படத்தை தினேஷ் கலைச்செல்வன் இயக்குகிறார். அவர் முன்னதாக சிறந்த சினிமாக்களிலும் குறும்படங்களிலும் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியால் கவனம் பெற்றவர். விமல் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். யோகி பாபுவின் நகைச்சுவை நேரம், விமலின் இயல்பான நடிப்பு, ஸ்ருஷ்டி டாங்கேயின் கவர்ச்சி ஆகியவை சேர்ந்து இப்படத்தை ஒரு பரபரப்பான கிராமத்துப் பிண்ணனியில் அமைந்த பொழுதுபோக்கு கலந்த சமூக திரைப்படமாக உருவாக்குகிறது. அத்துடன் “மகாசேனா” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கூடலூர் அருகே உள்ள சந்தனமலைப் பகுதியில் துவங்கியது. அந்தப் பகுதிகளின் இயற்கை அழகையும், மலைக்கிராமங்களின் சூழலையும் பதிவு செய்யும் வகையில் படக்குழு நுணுக்கமான ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தும் வெளி இடங்களில் இயற்கை ஒளியில் படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதனால் திரைப்படம் ஒரு இயல்பான அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக சமீபத்தில் “மகாசேனா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் விமல் ஒரு வீரத்தோடு, தீவிர பார்வையுடன் காட்சியளிக்கிறார். அவரின் தோற்றம் முற்றிலும் புதிய கோணத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. போஸ்டரின் பின்னணியில் கடவுள், போராட்டம் மற்றும் சமூக நீதி சார்ந்த ஒரு களத்தைப் பிரதிபலிப்பது போல தோன்றுகிறது. இது படம் ஒரு ஆழமான சமூக கருத்தை கொண்ட கதையாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது. இப்படத்தை குறித்து இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் பேசுகையில் “மகாசேனா என்பது ஒரு சாதாரண கிராமக் கதை அல்ல. இது ஒரு மனிதனின் தியாகம், நம்பிக்கை, சமூக அநீதிக்கு எதிரான போராட்டத்தை பேசும் கதை. விமல் இந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 'எல்.ஐ.கே' படம் ஹிட் கொடுக்கனும்..! திருப்பதி ஏழுமலையானிடம் ரெக்வஸ்ட் வைத்த நடிகை கீர்த்தி ஷெட்டி..!

யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகளும் படத்தை சமநிலைப்படுத்துகின்றன. எங்களது குழுவின் இலக்கு, மக்களின் மனதில் நீங்கா இடம் பெறும் திரைப்படம் உருவாக்குவது” என்றார். அவரை தொடர்ந்து பேசிய விமல், “மகாசேனா என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பம். இது ஒரு போராட்டக் கதையல்ல; ஒரு மனிதனின் மன அழுத்தம், துன்பம், அதற்கெதிரான எதிர்ப்பு சக்தி ஆகியவற்றைச் சொல்கிறது. இந்த கதாபாத்திரத்தை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டேன். சந்தனமலை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது, இயற்கையோடு இணைந்து நான் வாழ்ந்தேன் என்று உணர்ந்தேன். இந்த படம் ரசிகர்களுக்கு புதிய விமலை காட்டும்” என்றார். மேலும் யோகி பாபு, எப்போதும் போல நகைச்சுவையில் மட்டுமல்லாமல் உணர்ச்சி பக்கத்திலும் வித்தியாசமாக நடித்துள்ளார். மேலும் படத்தின் இயக்குநர் பேசுகையில், “யோகி பாபுவின் கதாபாத்திரம் இந்த படத்தில் சிறப்பு மிக்கது. அவர் சிரிப்பை மட்டும் தரவில்லை, சில இடங்களில் ரசிகர்களை கண்கலங்க வைக்கும்” என்றார். ஸ்ருஷ்டி டாங்கே, தமிழில் முன்னதாக சில படங்களில் நடித்திருந்தாலும், “மகாசேனா” மூலம் வலுவான என்ட்ரி கொடுக்கிறார்.
அவரது கதாபாத்திரம் சுயமரியாதை மிக்க பெண்ணாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் “மகாசேனா” திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. இதன் மூலம் விமல் தனது படைப்பை தென்னிந்தியாவைத் தாண்டி வடஇந்திய ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்துகிறார். இந்த பன்மொழி வெளியீடு, படத்தின் கதையின் பொது மனித உணர்வுகளை அனைவருக்கும் சேர்க்கும் முயற்சியாக கருதப்படுகிறது. படத்தின் இசையமைப்பாளர் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் படத்தின் பின்னணி இசை பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர் ஆகியோர் அனைவரும் புதிய தலைமுறை திறமையாளர்கள். இயற்கை ஒளியில் படப்பிடிப்பு நடப்பதால் காட்சிகள் நிஜத்தன்மையுடன் காணப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. படம் பல திரையரங்குகளில் பன்மொழி வெளியீடாக வருவதால், அதன் விநியோக உரிமைகள் தொடர்பாக பல தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆகவே “மகாசேனா” திரைப்படம் ஒரு சமூக பின்னணியுடன் கூடிய உணர்ச்சி கலந்த பன்மொழி படம்.

விமல் தனது அனுபவத்தால் புதிய அடையாளத்தை உருவாக்க முயல்கிறார். இயற்கையின் மத்தியில் படமாக்கப்படும் இந்த கதை, மனிதன் மற்றும் சமூகம் இடையேயான உறவையும் போராட்டத்தையும் பேசும் வகையில் இருக்கும். எனவே போஸ்டர் வெளியீட்டிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. படம் திரையரங்குகளில் வரும் நாள் வரை, ரசிகர்கள் அதற்காக காத்திருப்பது உறுதி.
இதையும் படிங்க: நான் மலையாளி-யா...பக்கா தமிழச்சி-பா..! கூகுளே சொல்லுது பாக்கலயா...டிரோல்களுக்கு பதிலடி கொடுத்த பேட் கேர்ள்..!