பார்க்க கவர்ச்சி முகத்துடனும் பெயரில் மேனன் என்ற அடைமொழியையும் கண்டு இவர் ஏதோ கேரளாவை சேர்ந்த அழகிய பெண் என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் பிறந்து சென்னையில் தனது படிப்பை முடித்து பின்னர் மாடலிங் துறையில் தனது கால் அடித்தடத்தை பதித்தவர்.
இதையும் படிங்க: சிரிப்பால் மனதை கொள்ளை கொள்ளும் நடிகை சான்வி மேக்னாவ்..!

பல வருடங்களாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசையில் தனக்கு கிடைத்த சைடு ரோல்களில் 'தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி?' போன்ற படங்களில் நடித்தார்.

இதனை அடுத்து பல வருட உழைப்புக்கு பின்பாக 'வீரா' என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன்.

இதனை அடுத்து நடிகர் மிர்ச்சி சிவாவின் 'தமிழ் படம் இரண்டாவது பாகத்தில்' அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

இதனை அடுத்து அவரது சினிமா கெரியரிலேயே அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என பார்த்தால் இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் உருவான 'நான் சிரித்தால்' திரைப்படத்தில் நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தான்.

இதனை அடுத்து தெலுங்கு திரை உலகில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக 'வேழம்' என்ற படத்தில் நடித்து, அங்குள்ள மக்களை தனது அழகால் மயக்கினார்.

இதனை தொடர்ந்து தற்பொழுது மலையாளம் இண்டஸ்ட்ரிலும் நுழைந்து தனது திறமையை காண்பித்து வருகிறார்.

இப்படி வெள்ளித்திரையில் கலக்கும் ஐஸ்வர்யா மேனன், ஒரு காலத்தில் சின்னத்திரையில் பிரபல தனியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'தென்றல்' சீரியலில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: வெளியானது 'பைசன்' படத்தின் 'தென்நாடு' பாடல்..! சத்யன் குரலில் மெய்சிலிர்க்க வைப்பதாக ரசிகர்கள் புகழாரம்..!