திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஹில் ஸ்டேஷன். தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று இயற்கையின் சுகத்தை அனுபவித்து வருகின்றனர். தற்போது கொடைக்கானலில் வானிலை மிக அருமையாக உள்ளது. காலையில் கடும் குளிரும், கண்முன் ஒரு அடி தூரம்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டமும் சூழ்ந்திருக்கிறது.
மாலைக் காலத்திலும் அதே பனிமூட்டத்துடன் குளிர் அதிகம் காணப்படுகிறது. கொடைக்கானல் முழுவதும் ஒரு சினிமா செட் போல பனியில் மிதந்து காணப்படுகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல்ஹாசன் இரு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ஓய்வுக்காக கொடைக்கானல் வந்துள்ளார். அவருக்குச் சொந்தமான தோட்ட பங்களாவில் அமைதியாக தங்கியிருந்த கமல், அங்குள்ள தூய காற்றையும், அமைதியையும் அனுபவித்து ரிலாக்ஸாக இருக்கிறார். நேற்று மட்டும் கொடைக்கானலின் பிரபலமான வில்பட்டி ரோடு பகுதி மற்றும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் பெப்பர் அருவி பகுதிகளுக்கு காரில் சென்று குளிரும் பனிமூட்டமும் நிறைந்த அந்த அழகை நேரில் ரசித்துள்ளார்.
அதிலும் வில்பட்டி சாலை என்பது பனி வீழ்ச்சி அதிகமுள்ள பகுதியாகும். காலை, மாலை நேரங்களில் அங்கு காரின் ஹெட் லைட் கூட பனிக்குள் மாயமான ஒளி போல தெரியும். அத்தகைய தருணத்தில் கமல் அங்கு காரில் சென்றுகொண்டிருந்தது லோக்கல் மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு பெரிய ஆச்சரியமாக இருந்தது. பலர் தொலைதூரத்தில் கமல் காரை பார்த்ததும் உற்சாகத்துடன் கை அசைத்து வணக்கம் தெரிவித்தனர். கமலும் சிரித்தபடி அவர்களுக்கு ஹாய் சொல்லி மகிழ்வூட்டினார். பனிமூட்டத்தால் காருக்குள் இருந்த அவரை பலரும் முழுமையாகப் பார்க்க முடியாவிட்டாலும், “கமல் சார் இந்த ரோட்டுல போயிருந்தாரு” என்ற செய்தி மட்டுமே அங்குள்ள மக்களிடம் ஒரு வைரல் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மார்பக அறுவை சிகிச்சைக்கு பின்.. இப்பதான் நால்லா இருக்கு..! நடிகை ஷெர்லின் சோப்ரா பளிச் ஸ்பீச்..!

சிலர் அந்த பனியில் மறைந்த காரை வீடியோபடுத்திக் கொண்டு சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர். பனி காரணமாக கமலின் உருவம் முழுமையாகத் தெரியாமலிருந்தாலும், அந்த வீடியோக்களும் ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றன. பெப்பர் அருவி தற்போது சுற்றுலா பயணிகளிடம் மிகப்பெரும் டிரெண்டிங் ஸ்பாட்டாக உள்ளது. தண்ணீரின் உருக்குலையும் ஓசையோடு பனியும் கலந்து அங்குள்ள இயற்கை ஒரு மாய உலகத்தைப் போல காட்சியளிக்கிறது. அந்த அமைதியான சூழலில் கமல் சில நிமிடங்கள் தங்கி அந்த அழகைப் பார்த்து ரசித்ததாக லோக்கல் மக்கள் கூறுகிறார்கள். அவர் அங்கு நிற்கும்போதே அந்த இடத்தின் அழகு மேலும் உயர்ந்ததாகவும் மக்கள் கூறினர். இதையெல்லாம் பார்த்த சுற்றுலா பயணிகள், “நாங்கள் வந்த நாளே கமல் சார் வந்திருக்காரு… இது எங்களுக்கு லக்கி நாள்” என்று உற்சாகப்பட்டனர்.
லோக்கல் டாக்சி டிரைவர்களும், கடைதாரர்களும், ஹோட்டல் பணியாளர்களும் கமலைப் பார்த்த அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். “சார் வந்த நாளிலிருந்து பனிமூட்டம் கூட இன்னும் அழகா மாறிடுச்சு போல” என்று சிலர் நகைச்சுவையாக குறிப்பிட்டனர். கொடைக்கானல் மக்கள், கமலின் இந்த வருகையை ஒரு சிறப்பான நாளாகவே நினைத்தார்கள். கமலையும், பனியையும் ஒரே நேரத்தில் காணும் அனுபவம் அவர்களுக்கு புதுமையாக இருந்ததாகவும், இது அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நினைவாக இருப்பதாகவும் பலர் கூறினர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, அனைவரும் “இன்று கமல் சார் பனியில் உலா வந்தாரு” என்று பெருமையாக பேசினர்.
கமலின் இந்த டிரிப் முழுவதும் மிக அமைதியான, ஓய்வு எடுக்கும் நோக்கத்துடன் நடைபெற்றதால், அவர் அதிக நேரம் பிரபலமான இடங்களில் தங்கவில்லை. இருப்பினும் குறுகிய நேரம் அவர் வெளியில் வந்த தருணமே அங்கிருந்த மக்களுக்கு ஒரு திருவிழா போல மாறியது.

பனி, குளிர், இயற்கை, நட்சத்திரத்தின் வருகை என இவை அனைத்தும் சேர்ந்து கொடைக்கானலில் அந்த ஒரு நாளை சிறப்பான வரலாற்றுப் பகுதியாய் மாற்றிவிட்டன. கொடைக்கானல் முழுவதும் “அன்று கமல் சார் பனியில் வந்தார்” என்ற நினைவு அந்த மலை மீது விழுந்த பனித்துளிகளைப் போலவே மனதில் பதிந்து விட்டது.
இதையும் படிங்க: கிளாமரை விட ட்ரெடிஷ்னலில் மயக்குறீங்களே மேடம்..! நடிகை பிரியங்கா சோப்ராவின் கலக்கல் போட்டோஷூட்..!