இந்திய சினிமா உலகம் முழுவதும் இன்று ஒரு இயக்குநர் மேல் அதிகப்படியான கவனத்தை வைத்து உள்ளனர்.. அப்படியே எப்பொழுது அப்டேட் ஒன்றை கொடுப்பார் என்ற அளவிற்கு முக்கியமாக பார்க்கப்படுபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவரது படங்கள், திரைக்கதையிலும், கதாபாத்திர வடிவமைப்பிலும் புதிய பரிமாணங்களை உருவாக்கியிருக்கின்றதால் அதிகளவு ரசிகர்களை கொண்டுள்ளார். அவரது இயக்கத்தில் உருவான ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ முதலிய படங்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இவை அனைத்தும் சேர்ந்தே உருவாகும் ‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் அதாவது LCU’ எனும் தனி பட வலய தொடர்பையும் உருவாக்கி இருக்கின்றன.
இந்த நிலையில், இந்திய திரையுலகில் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் லோகேஷ் கனகராஜின் புதிய திரைப்படம் தான் ‘கூலி’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் சமீப காலமாக வெளியான நிலையில், இதுவும் எல்.சி.யு. படமாகத்தான் உருவாகிறது, மேலும் கமல்ஹாசனும் இதில் சிறப்பு தோற்றமாக நடிக்கிறார் என்ற செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின. ஆனால், இந்த தகவல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முற்றிலும் மறுத்துள்ளார். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில், "கூலி என்பது LCU யில் சேரும் படம் அல்ல" என்று உறுதியோடு தெரிவித்தார். இதனால், ரசிகர்கள் மத்தியில் எழுந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

அதன்படி அவர் பேசுகையில், "நான் ரஜினி சாருக்காகவே ‘கூலி’யை எழுதினேன். இது LCU-வின் ஒரு பகுதி அல்ல. கமல் சாரை ‘கூலி’க்குள் கொண்டுவர விருப்பமில்லை. அதேபோல், ரஜினி சாரை ‘விக்ரம்’ உலகிற்குள் கொண்டு செல்லவும் விருப்பமில்லை. ஒவ்வொரு நடிகருக்கும், ஒவ்வொரு உலகமும் தனித்துவமாக இருக்க வேண்டும். ஆகவே ‘கூலி’ என்பது ஒரு தனித்த படம். அதன் மைய கருத்தும், அதன் உயரமும் ஆழமும் ரஜினி சார்தான்" என லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். அவர் கொடுத்த இந்த தகவல், தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும். அதேபோல் சூப்பர் ஸ்டார் படமான ‘கூலி’ LCU-க்குள் வராது என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்படி இருக்க, ‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ ஆன LCU என்பது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய ஒரே கதாநாயகர்களும், ஒவ்வொரு படத்திலும் தொடரும் கதைகளும் கொண்ட சினிமா பிரபஞ்சம். உதாரணத்திற்கு MCU என்று சொல்லக்கூடிய Marvel Cinematic Universe மற்றும் DCEU என்கின்ற DC Extended Universe போன்ற பாணியில் அவரது படங்களும் தொடர்களாக உருவாக்கப்படுகிறது. ‘கைதி’ திரைப்படத்தில் கார்த்தி நடித்த தனியார் காவலாளி தினேஷ், ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன், ஃபாஹத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவான பரபரப்பான கதையுடன், ‘லியோ’ படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் என இவை அனைத்தும் ஒரே பிரபஞ்சத்தில் நடைபெறுவதை காண்பிக்கிறது.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் குறித்து கம்ளைண்ட் செய்த ரஜினிகாந்த்..! ‘கூலி’ இசைவெளியீட்டு விழாவில் சஸ்பென்ஸ் இருக்காம்..!
இந்த LCU தளத்தில் தற்போது வரை ரஜினிகாந்த் இடம்பெறவில்லை. எனவே, ‘கூலி’ படம் LCU-வின் தொடர்ச்சி என்று எதிர்பார்த்தவர்களுக்கு இயக்குநரின் பதில் ஒரு தெளிவை வழங்கியுள்ளது. இந்தப் படத்தில் LCU தொடர்புகள் இருப்பதா இல்லையா என்பது ரசிகர்களுக்கு ஒரு ஆர்வமான விவகாரம் தான். ஆனால், ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி என்பதே ரசிகர்களை திரையரங்கம் நோக்கி இழுத்துச் செல்லக்கூடிய மிகப்பெரிய காரணமாகத் இருக்கிறது. மேலும், ரஜினியின் கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த "தர்பார்", "அண்ணாத்த", "ஜெயிலர்" ஆகிய படங்களில், அவர் மீண்டும் தனது மாஸ் ஸ்டைல்கள் கொண்ட தோற்றங்களை கண்ட ரசிகர்கள், இந்த படத்திலும் ரஜினியின் தோற்றத்தை காண ஆவலாக இருக்கின்றனர்.

எனவே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்த இந்த விளக்கம், கூலி படம் குறித்து ஏற்பட்டிருந்த தவறான ஊகங்களைத் தெளிவுபடுத்துகிறது. இது LCU பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக அல்ல, ஒரு தனித்துவமான ரஜினி படமாக உருவாகும் என்பதால், “கூலி” என்பது ரஜினிகாந்திற்காக எழுதப்பட்ட, அவரது ஸ்டைல் மற்றும் மாஸ் செல்வாக்கை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் ஒரு படமாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.
இதையும் படிங்க: இணையத்தில் லீக்-ஆன ரஜினியின் ‘கூலி’ படத்தின் கதை...! படக்குழுவை பதறவைத்த அதிர்ச்சி சம்பவம்..!