தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்படும் தேதிகளை அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமையகமான 'அம்பேத்கர் திடலில்' இந்த விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.
மார்ச் 21 சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி, மார்ச் 22 (ஞாயிற்றுக்கிழமை): கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மற்றும் நாமக்கல், மார்ச் 23 (திங்கட்கிழமை): ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம், மார்ச் 24 (செவ்வாய்க்கிழமை): திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி. ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலாருக்கும் விருப்ப மனு கட்டணமாக ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விசிக தற்போது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நீடிக்கிறது. இத்தேர்தலில் விசிக குறைந்தது 12 தொகுதிகளுக்கு மேல் (இரட்டை இலக்க எண்ணிக்கை) எதிர்பார்ப்பதாகத் தலைவர் தொல். திருமாவளவன் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!
சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள விசிக, இந்தத் தேர்தலில் தனது தனித்துவமான செல்வாக்கை நிரூபிக்கத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பொதுத் தொகுதிகளிலும் விசிக வேட்பாளர்களைக் களமிறக்கத் திருமாவளவன் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதையும் படிங்க: ரஜினியை மிரட்ட யாராலும் முடியாது..!! ஆதவ் அர்ஜுனாவிற்கு திருமாவளவன் பதிலடி!