• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மீசைய முறுக்கு 2 விமர்சனம்: முதல் பாதி Fun.. இரண்டாம் பாதி Emotion..!! மீண்டும் மீசையை முறுக்க வைக்கிறாரா ஹிப்ஹாப் ஆதி..!

    ஹிப்ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு 2 படம் எப்படி இருக்கு என்ற விமர்சனம் இதோ.
    Author By Bala Fri, 25 Sep 2026 15:39:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-meesaya-murukku-2-review-tamilcinema

    ஹிப்ஹாப் ஆதியை 2K கிட்ஸ்களின் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லும் அளவுக்கு, இசை மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அவர். இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குநர் என அடுத்தடுத்த கட்டங்களில் தன்னை விரிவுபடுத்திக்கொண்ட ஆதி, ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் களம் இறங்கினார். இளைஞர்களை மையமாக வைத்து உருவான அந்தப் படம் அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

    இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘மீசைய முறுக்கு 2’ மூலம் அந்த உலகத்திற்குள் திரும்பியிருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. இம்முறை 2K கிட்ஸ் மட்டுமின்றி, தற்போதைய ஜென்-சி ரசிகர்களையும் கவரும் வகையில் பல்வேறு டிரெண்டிங் அம்சங்களை கதைக்குள் சேர்த்திருக்கிறார். முதல் பாகத்தின் வெற்றியை இந்த இரண்டாம் பாகம் மீண்டும் கொடுத்திருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

    மூன்று தலைமுறைகளில் ஒரு கதை

    படத்தின் கதைக்களம் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கிறது. 1970-களில் கர்நாடக இசை பல இடங்களில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், கானா இசையின் மூலம் ஒரு பெரிய கலைஞனாக வேண்டும் என்று போராடும் ஒரு இளைஞனின் கதையிலிருந்து படம் தொடங்குகிறது. அந்த காலகட்டத்தில் கானா இசைக்கு கிடைத்த சமூக அங்கீகாரம் குறைவாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இசை மட்டுமே உயர்ந்ததாக பார்க்கப்படும் சூழலில், கானாவை தன்னுடைய குரலாக எடுத்துக்கொண்டு முன்னேற முயற்சிக்கும் ஆதியின் போராட்டம் கதையின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது. பின்னர் கதை இன்றைய காலகட்டத்திற்கு வருகிறது. இங்கு ஆதி, ஹர்ஷத் கான் உள்ளிட்டவர்கள் டிஜே மற்றும் துணை நடிகர்கள் உள்ளிட்ட துறைகளில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெற போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் ராஜி..!! புடவையில் லட்சணமாக ஜொலிக்கும் ஷாலினி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

    இந்தப் போராட்டத்தின் போது ஒரு பெரிய தயாரிப்பாளரின் மகனுடன் மோதல் ஏற்படுகிறது. ஒரே பெண்ணை இருவரும் காதலிக்க, விஷயம் அடிதடி வரை செல்கிறது. இறுதியில் காவல் நிலையம் வரை செல்லும் இந்த பிரச்சினை கதையை மற்றொரு காலகட்டத்திற்கு நகர்த்துகிறது. அதன்பிறகு கதை 1990-களுக்கு செல்கிறது. மூன்று வெவ்வேறு தலைமுறைகளில் ஆதிக்கு என்ன நடந்தது? ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் சந்தித்த தடைகள் என்ன? அந்த தடைகளை கடந்து அவர் தனது இலக்கை அடைந்தாரா? என்பதுதான் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் மையக்கதை.

    மூன்று கதாபாத்திரங்களில் ஆதி

    படத்தின் முக்கியமான சுவாரஸ்யமே மூன்று காலகட்டங்களில் வரும் ஆதியின் கதாபாத்திரங்கள். தாஸ், டைகர் சிவா, ஜீவா என மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி சாயலில் அமைந்துள்ளன. மூன்று கதாபாத்திரங்களின் தோற்றம், உடல்மொழி மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது நடிப்பை மாற்ற முயற்சி செய்திருக்கிறார் ஆதி.

    குறிப்பாக, மூன்று தலைமுறைகளையும் ஒரே கதைக்குள் இணைக்க முயன்றிருக்கும் விதம் படத்திற்கு ஒரு வித்தியாசமான அடுக்கை கொடுக்கிறது. தாத்தாவாக கருணாஸையும், அப்பாவாக பாபா பாஸ்கர் மாஸ்டரையும் கொண்டுவந்திருக்கும் ஐடியா ரசிக்க வைக்கிறது. குடும்ப உறவுகள் மற்றும் தலைமுறைகளுக்கு இடையேயான தொடர்புகளை இந்தக் கதாபாத்திரங்கள் மூலம் காட்டியிருப்பது படத்தின் முக்கியமான அம்சமாக உள்ளது.

    meesaya-murukku-2-review

    முதல் பாதி – முழுக்க Fun Mode

    படத்தின் முதல் பாதி முழுவதும் இன்றைய டிரெண்ட் மற்றும் ஜென்-சி ரசிகர்களை கவரும் வகையிலான விஷயங்களால் நிரம்பியுள்ளது. மீம்ஸ், ஒன்-லைன் காமெடி, நண்பர்களுக்கு இடையேயான கலாட்டா, காதல், பாடல்கள் என ஒரு கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் பேக்கேஜாக முதல் பாதியை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். விஜய் வரதராஜ், ஷாரா, ஹர்ஷத் கான், யோகிபாபு உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் தங்களது வழக்கமான ஒன்-லைன் காமெடி மற்றும் மேனரிசம் மூலம் சிரிக்க வைக்கிறார்கள்.

    குறிப்பாக முதல் பாகத்தை நினைவுபடுத்தும் வகையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள ‘மீசைய முறுக்கு’ ரெஃபரன்ஸ்கள் ரசிகர்களுக்கு ஒரு நாஸ்டால்ஜிக் உணர்வை கொடுக்கின்றன. முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் அந்த படத்தின் சில காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் நினைவுபடுத்திக்கொள்ளும் வகையில் பல இடங்களில் ரெஃபரன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த விஷயங்கள் ரசிகர்களிடம் உடனடியாக கனெக்ட் ஆகின்றன. ஆனால் இதே அம்சம்தான் ஒரு கட்டத்திற்கு மேல் படத்தின் பலவீனமாகவும் மாறுகிறது.

    கதைக்குள் செல்லாமல் சுற்றும் முதல் பாதி

    காமெடி, பாடல்கள், ஜாலியான காட்சிகள் என முதல் பாதி வேகமாக நகர்ந்தாலும், ஒரு கட்டத்தில் படத்தின் முக்கியக் கதைக்குள் படம் செல்லாமல் இதே விஷயங்களை சுற்றி வருவது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய இடங்களிலும் மீண்டும் காமெடி அல்லது ஒரு ஜாலியான காட்சிக்கு படம் செல்வதால், படத்தின் வேகம் சில இடங்களில் குறைகிறது. “இவ்வளவு நேரம் Fun பார்த்தாச்சு, இனி கதை எப்போது தொடங்கும்?” என்ற எண்ணம் ஒரு கட்டத்தில் பார்வையாளர்களுக்கு வர வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், இடைவேளையில் வரும் திருப்பம் படத்தை மீண்டும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அந்த ட்விஸ்ட் இரண்டாம் பாதை மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

    ரம்யா ரங்கநாதன் கவனம் ஈர்க்கிறார்

    படத்தில் கதாநாயகிகளில் ரம்யா ரங்கநாதன் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கதையின் தேவைக்கு ஏற்ப அவர் கொடுத்துள்ள நடிப்பு, குறிப்பாக உணர்வுப்பூர்வமான காட்சிகளில் வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. கதாநாயகி கதாபாத்திரம் வெறும் காதல் பகுதிக்காக மட்டும் பயன்படுத்தப்படாமல், கதையின் முக்கியமான திருப்பங்களிலும் அதன் உணர்வுகளிலும் பங்கு பெறுகிறது. இதனால் ரம்யாவின் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தில் நிற்கிறது.

    இரண்டாம் பாதியின் பலம் – எமோஷன்

    முதல் பாதி முழுவதும் Fun-ஐ நம்பி நகர்ந்த நிலையில், இரண்டாம் பாதி படத்தின் உணர்வுப்பூர்வமான பகுதிக்கு செல்கிறது. குறிப்பாக டைகர் சிவா கதாபாத்திரத்தின் எமோஷனல் பயணம் இரண்டாம் பாதியை தாங்கிப் பிடிக்கிறது. கதாபாத்திரத்தின் கடந்த காலம், குடும்ப உறவுகள் மற்றும் தனிப்பட்ட போராட்டங்கள் ஆகியவை வெளிப்படும் போது படத்தின் உணர்வுப்பூர்வமான தன்மை அதிகரிக்கிறது. இதில் அப்பா–மகன் உறவை மையமாக வைத்து வரும் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கின்றன. இதுவரை காமெடி மற்றும் ஜாலியாக நகர்ந்த படம், இந்தப் பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக மாறுகிறது. குறிப்பாக அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவை சொல்லும் காட்சிகளில், படத்தின் கதாபாத்திரங்கள் மீது பார்வையாளர்களுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு ஏற்படுகிறது.

    வசனங்கள் – ஜென்-சி கனெக்ட்

    படத்தின் வசனங்களும் இன்றைய தலைமுறையை மனதில் வைத்து எழுதப்பட்டுள்ளன. “ரேஸை ஒன்றாக ஆரம்பித்தால்தான் அது பெயர் ரேஸ். ஒரு கிரவுண்ட் கட்டி அதுக்குள்ள அவங்க மட்டும் விளையாடுறது என்ன ரேஸ்?” போன்ற வசனங்கள் சமூக சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளன. இந்த வசனங்கள் சில இடங்களில் ரசிகர்களிடம் உடனடியாக கைத்தட்டலை பெறும் வகையில் எழுதப்பட்டுள்ளன.

    அதே நேரத்தில், படத்தில் சிலரை காமெடி என்ற பெயரில் கிண்டல் செய்வது போன்ற காட்சிகளும் இடம்பெறுகின்றன. அதற்கு ஆதி கதாபாத்திரம் மூலமாகவே விளக்கம் கொடுக்கும் வகையில் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் கிண்டல், மறுபுறம் அதற்கான விளக்கம் என இரண்டையும் பேலன்ஸ் செய்ய முயற்சி செய்திருப்பது தெரிகிறது. ஆனால் “ஏதாவது ஒரு பக்கம் தெளிவாக நில்லுங்கள்” என்ற உணர்வும் சில இடங்களில் ஏற்படுகிறது.

    meesaya-murukku-2-review

    சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய வசனங்கள்

    சமீபத்தில் பிரபலமான ஒரு இசையமைப்பாளரை விமர்சிப்பது போல சில வசனங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பிட்ட ரசிகர்கள் அந்த வசனங்களுடன் கனெக்ட் ஆகி கைத்தட்டும் வாய்ப்பு இருந்தாலும், அவை சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் உள்ளன. படத்தின் கதைக்கு தேவையான நையாண்டியாக சில ரசிகர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில், குறிப்பிட்ட நபரை குறிவைத்து பேசுவது போன்ற தோற்றம் ஏற்படுவதால் இதுகுறித்து இணையத்தில் விவாதங்கள் உருவாகும் வாய்ப்பும் உள்ளது.

    இசை எப்படி?

    ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் படங்களில் பாடல்கள் முக்கியமான இடத்தை பிடிப்பது வழக்கம். அந்த வகையில் ‘மீசைய முறுக்கு 2’ படத்திலும் பாடல்கள் இருக்கின்றன. முதல் பாகத்தின் பாடல்களைப் போல ஒவ்வொரு பாடலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், குறைந்தபட்சம் மூன்று பாடல்கள் நல்ல வைபை கொடுக்கின்றன. இன்றைய இளம் தலைமுறையை மனதில் வைத்து பாடல்களின் இசை அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது தெரிகிறது. பின்னணி இசையை பொறுத்தவரை முதல் பாதியில் சில இடங்களில் சத்தம் சற்று அதிகமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. காமெடி காட்சிகளுக்கு பின்னணி இசை அதிகமாக வலியுறுத்தப்பட்டிருப்பதால் சில இடங்களில் அது காட்சியை விட முன்னால் சென்றுவிடுகிறது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ். மூன்று வெவ்வேறு காலகட்டங்களை காட்சிப்படுத்த வேண்டியிருப்பதால், ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தனித்துவமான காட்சியமைப்பை உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. அந்த வகையில் படத்தின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகள் மற்றும் இளைஞர்களை மையமாகக் கொண்ட காட்சிகளில் நிறங்களின் பயன்பாடு படத்திற்கு ஒரு எனர்ஜியை கொடுக்கிறது.

    நிறை – குறைகள்

    க்ளாப்ஸ்:
    ஹிப்ஹாப் ஆதியின் நடிப்பு, மூன்று காலகட்டங்களில் அவரது கதாபாத்திர வடிவமைப்பு, ரம்யா ரங்கநாதனின் நடிப்பு, இரண்டாம் பாதியின் எமோஷனல் காட்சிகள், அப்பா–மகன் உறவை மையமாகக் கொண்ட பகுதிகள், இளமை துள்ளலான காமெடி மற்றும் சில வசனங்கள்.

    பல்ப்ஸ்:
    முதல் பாதியில் கதைக்குள் செல்லாமல் தொடர்ந்து காமெடி மற்றும் Fun அம்சங்களையே சுற்றி வருவது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. முதல் பாகத்தின் டெம்ப்ளேட்டில் இருந்து முழுமையாக வெளியே வராமல், சில காட்சிகள் அடுத்தது என்ன என்பதை முன்கூட்டியே யூகிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன. மேலும், சில நையாண்டி வசனங்கள் மற்றும் குறிப்பிட்ட நபர்களை நினைவுபடுத்தும் வகையிலான காட்சிகள் படத்திற்கு வெளியிலும் விவாதத்தை உருவாக்கக்கூடியவை.

    மொத்தத்தில்

    ‘மீசைய முறுக்கு 2’ முழுக்க முழுக்க ஒரே மாதிரியான அனுபவத்தை வழங்கும் படம் அல்ல. முதல் பாதியில் Fun அதிகம்; இரண்டாம் பாதியில் Emotion அதிகம். முதல் பாதியில் காமெடி, பாடல்கள், டிரெண்டிங் ரெஃபரன்ஸ்கள் என இன்றைய ஜென்-சி ரசிகர்களை கவரும் முயற்சிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் அந்த Fun ஓவர்டோஸாக மாறும்போது கதையின் வேகம் சற்று பாதிக்கப்படுகிறது. இடைவேளைக்குப் பிறகு கதை உணர்வுப்பூர்வமான பாதைக்கு திரும்பும்போது படம் மீண்டும் கவனம் பெறுகிறது. குறிப்பாக அப்பா–மகன் காட்சிகளும் டைகர் சிவாவின் எமோஷனல் டிராக்கும் படத்தின் இரண்டாம் பாதைக்கு வலு சேர்க்கின்றன.

    meesaya-murukku-2-review

    முதல் பாகத்தின் அதே டெம்ப்ளேட்டை எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களுக்கு பல இடங்களில் பழக்கமான உணர்வு ஏற்படலாம். ஆனால் புதிய தலைமுறைக்கான காமெடி, டிரெண்டிங் வசனங்கள் மற்றும் எமோஷனல் குடும்பக் காட்சிகள் மூலம் தன்னுடைய ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள ஆதி முயற்சி செய்திருக்கிறார். மொத்தத்தில், முதல் பாதி Fun ஓவர்டோஸால் சற்று சோதித்தாலும், இரண்டாம் பாதியின் Emotions க்ளிக் ஆனதால் ‘மீசைய முறுக்கு 2’ மீண்டும் மீசையை முறுக்க வைக்கும் அளவுக்கு ஒரு ஜாலியான கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் அனுபவமாக அமைகிறது.

    இதையும் படிங்க: டோரதி விமர்சனம்: கீர்த்தி சுரேஷின் துணிச்சலான கதைக்களம்..!! இளையராஜாவின் இசை பலம் – கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ எப்படி இருக்கு..!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share