தமிழ் சினிமாவில் நடிகை குஷ்பூவின் மகள் என்று அழைக்கப்படுபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் தன்னுடைய இயக்கத்தில் வெளியான 'தேசமுருடு' என்ற திரைப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக முதன் முதலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து, அடுத்த வருடமே 'பிந்தாஸ்' எனும் கன்னட திரைப்படத்தில் புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்து கன்னட திரையுலகில் தனக்கான அந்தஸ்த்தை பெற்றார்.
இதையும் படிங்க: திருமணம் ஆனா என்ன..? ஒரு துளி அழகு கூட குறையாமல் கிளாமர் லுக்கில் ஹன்சிகா மோத்வானி..!!

பின் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' என்ற படத்தில் நடித்து இங்கு தனக்கான ரசிகர்களை உருவாக்க நினைத்தார்.

இந்த சூழலில், 2011-ம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக 'எங்கேயும் காதல்' படத்தில் நடித்தார் ஹன்சிகா,

இந்த படத்தில் அவரை பார்த்த இளசுகள், தமிழகத்திற்கு கிடைத்த 'சின்ன குஷ்பூ' என அவரை அழைக்க ஆரம்பித்தனர். பின் அவருக்காக ஒரு ரசிகர் படையே இங்கு உருவானது.

தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி நடிகையாக மாறிய ஹன்சிகா, அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். அந்த வகையில் ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, வேலாயுதம், தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட், போகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தனது நீண்டகால காதலரான தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை 2022 டிசம்பர் 4 அன்று ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் மிகவும் விமர்சையாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், அழகில் ஒரு துளி கூட குறையாத ஹன்சிகா, அழகாக ரோஜாப்பூ உடை அணிந்து கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வெளியானது நடிகர் யோகிபாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' பட டீசர்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!