தமிழ் சினிமாவிலும், தமிழக அரசியலிலும் புதிய பரிணாமங்கள் இடையே 2026-ம் ஆண்டின் பொங்கல் திருவிழா பாக்ஸ் ஆஃபிஸில் கடும் போட்டியை உருவாக்க இருக்கிறது. இதற்கு காரணமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தன்னுடைய நடிப்பை முற்றிலுமாக நிறுத்திவிட்டு அரசியலில் முழுமையாக களமிறங்கியிருப்பதும், அவரின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதுமே காரணம் ஆகும்.
அதன்படி 2026-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர இருக்கிற இந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழக மக்களுக்கே ஒரு தனிச்சிறப்பை கொண்டதாக இருக்கலாம். இது வெறும் ஒரு சினிமா மட்டும் அல்ல, அவரது அரசியல் பயணத்தின் ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு, இளைஞர்களின் எதிர்காலம் போன்ற முக்கியமான அரசியல் அடிப்படைக் கருத்துகள் இதில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் கட்சியான ‘தமிழக வெற்றிக் கழகம்’உருவாகி சில மாதங்களே ஆன நிலையில், அவரின் கடைசி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திரைப்பயணத்தின் முடிவில் அவர் கொடுக்கும் ‘புதிய அறிக்கை’ போன்றே இந்த படத்தின் தாக்கம் இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், திகில் கொடுக்கும் போட்டியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14, 2026 அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார் என்பதும், திரைப்படத்திற்கே ஒரு தனி தரத்தை கூட்டி விட்டது. இதுவும் ஒரு அரசியல் நுணுக்கம் நிறைந்த கதையென்றே கூறப்படுகிறது.

இதில் ஜெயம் ரவி, அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுதா கொங்கரா இயக்கும் படங்கள் எப்போதும் ஒரு சமூக உரையாடலை தூண்டும் வகையில் இருக்கும் என்பதால், பராசக்தி திரைப்படமும் ஜனநாயகனுக்கே நிகராக அரசியல் தளத்தில் ஒரு ‘சினிமா டெபேட்’ உருவாக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக தமிழ் சினிமா வரலாற்றில், பொங்கல் ரிலீஸ் என்பது தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு பண்டிகை போலவே இருக்கிறது. கடந்த பல வருடங்களாக, விஜய், அஜித், ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் இந்த நாளை தங்கள் முக்கியமான படங்களுக்காக தேடி வந்தனர். இப்போது, விஜய் தனது கடைசி படத்துடன் களம் இறங்க, அதற்கு நேரடி போட்டியாக சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பலர் இணையும் ஒரு பல்கலைப்படம் வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ரயிலில் இருந்து குதித்த பிரபல நடிகை..! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி...என்ன நடந்தது..!
இதற்கிடையில், சினிமா ரசிகர்கள், அரசியல் பின்புலங்களை ஆராயும் மக்கள், பட விமர்சகர்கள் அனைவரும் இந்த இரண்டு படங்களையும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர். விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு உணர்வுப் பெருக்கமே. அவர் அரசியலில் இறங்கிய பிறகு, திரையில் அவரை மீண்டும் காணும் கடைசி வாய்ப்பு என்பதால், ஜனநாயகன் படம் விஜய் ரசிகர்களிடையே பண்டிகையை விட பெரிய நிகழ்வாக இருக்கிறது. அதேவேளை, பராசக்தி திரைப்படம் ஒரு புதிய சமூக அரசியல் விமர்சனமாகவும், நவீன தமிழ் சினிமாவின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் படையாகவும் பார்க்கப்படுகிறது. ஆகவே 2026 ஜனவரி மாதம் தமிழக பாக்ஸ்ஆஃபிஸ் மட்டுமல்ல, மக்கள் மனசுகளிலும் இரண்டு படங்கள் இடம் பிடிக்கப் போகின்றன. ஒற்றை நாயகனின் கடைசி சினிமா அழைப்பு என்ற வகையில் விஜய், புதிய சக்தியாக அரசியல் கருத்துகளுடன் இணைந்து வருகிறார். அதே நேரத்தில், பல கதாப்பாத்திரங்களை இணைத்து, சமூக உரையாடலை நெகிழ்வாக்கும் வகையில் உருவாகும் பராசக்தி, தமிழ்ச் சினிமாவின் புதிய அடையாளமாக வளர வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் விஜய் அரசியலுக்கு சென்றாலும், சினிமா ரசிகர்களின் இதயத்தில் அவர் ஒரு நிலையான இடம் பிடித்திருக்கிறார்.

அதேபோல, புதிய தலைமுறைக் குரல்களாக வரும் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி போன்றோரும், சமூகம் பேச வேண்டிய கேள்விகளை சினிமா மூலமாக முன்வைக்கத் தயாராக இருக்கின்றனர். எனவே 2026-ம் ஆண்டின் பொங்கல், தமிழ்ச் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனையாக அமைவதற்கான எல்லா அடையாளங்களும் இப்போது தெரிகின்றன. ஜனநாயகன் மோதும் பராசக்தி படம் வெளியானாலும் யாருக்கு மக்கள் தீர்ப்பு சொல்லப் போகிறார்கள் என்பதை பொங்கல் தான் முடிவு செய்யும்.
இதையும் படிங்க: நடிகை திஷா பாட்னி வீட்டின் மீது துப்பாக்கி சூடு..! சனாதன தர்மத்துக்கு எதிராக பேசினாலே கொலையா..?