இந்திய திரையுலகில் தொடர்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் பூஜா ஹெக்டே, தனது திரைப்படங்களும், சமூக வலைதள செயல்பாடுகளும் மூலம் ரசிகர்களின் கவனத்தை எப்போதும் தக்க வைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் வெற்றிகரமாக நடித்து வரும் அவர், தற்போது பல பெரிய படங்களின் மூலம் மீண்டும் திரையுலகில் தனது இருப்பை வலுப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கலக்கல் காம்போ..!! படத்தின் டைட்டில் வெளியீடு.. இன்று மாலை செகண்ட் லுக் ரிலீஸ்..!

அவரது வரவிருக்கும் படங்களின் பட்டியல் கூட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஜனநாயகன், Hai Jawani Toh Ishq Hona Hai மற்றும் காஞ்சனா 4 ஆகிய திரைப்படங்கள், அவரின் அடுத்த கட்ட திரை பயணத்தை நிர்ணயிக்கும் முக்கியமான படைப்புகளாக கருதப்படுகின்றன.

இந்த மூன்று படங்களும் வெவ்வேறு ஜானர்களில் உருவாகி வருவதால், பூஜா ஹெக்டே தனது பன்முக திறமையை மீண்டும் நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படங்களில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் அவர் மிகவும் ஆக்டிவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக Instagram தளத்தில் அவர் பகிரும் பதிவுகள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அவ்வப்போது தனது படப்பிடிப்பு தருணங்கள், பயண அனுபவங்கள், மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

அந்த வரிசையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: Money Heist விட பயங்கரமா இருக்கும் போலையே..!! மிரட்டும் தனுஷின் 'கர' படத்தின் திரைவிமர்சனம்..!