தமிழ் சினிமாவின் தலைவர் ரஜினிகாந்த் கடந்த மாதம் வெளியான 'கூலி' திரைப்படத்தின் மூலம் மீண்டும் மாஸ் ஹீரோ அவதாரத்தில் ரசிகர்களை கவர்ந்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படம், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக பல மாநிலங்களில் சாதனைகள் படைத்தது.
சினிமா ஹால் ரிப்போர்டுகளின் படி, ‘கூலி’ ஒரே வாரத்தில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வெற்றியின் பின், ரஜினிகாந்த் உடனே 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் பிஸியாகி விட்டார். ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் 'ஜெயிலர் 2', நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதன் முக்கியமான காட்சிகள் சமீபத்தில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் படமாக்கப்பட்டன. சண்டைக் காட்சிகள், ஆழமான உணர்வுப் பகுதிகள், ஹெலிகாப்டர் ட்ரோன் ஷாட்கள் போன்றவை இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இப்படி இருக்க பாலக்காட்டில் நடந்த படப்பிடிப்பின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பறக்கும் ஹெலிகாப்டர், ரத்தம் பரவும் ஃபைட் சீன்கள் போன்றவற்றால் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படி இருக்க படப்பிடிப்பு முடிந்து, இன்று காலை ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

அப்போது பத்திரிகையாளர்கள் அவரைச் சந்தித்து சில கேள்விகள் எழுப்பினார்கள். அதில், அவர் மிக சுருக்கமாகக் கூறுகையில், “மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி படம் திரைக்கு வரும்” என்றார். எப்படியோ இதன் மூலம், ரசிகர்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பு உறுதியாகிவிட்டது. இப்படி இருக்க பத்திரிகையாளர்கள் மத்தியில் ரஜினிகாந்த், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதைப் பற்றி உருக்கமாகக் கூறினார். அதன்படி பேசுகையில், "மோகன்லால் ஒரு நேர்த்தியான கலைஞர் மட்டுமல்ல, இந்திய சினிமாவின் சிறந்த சொத்து. அவருக்கு இந்த தேசிய அங்கீகாரம் கிடைத்தது மிகுந்த பெருமையளிக்கிறது. அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்" என்றார்.
இதையும் படிங்க: நான் வாந்தி எடுக்க காரணம் ஸ்விகி நிறுவனம் தான்..! வீடியோ வெளியிட்டு கொந்தளித்த நடிகை சாக்சி அகர்வால்..!
இந்த வார்த்தைகள், ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால் இடையிலான மரியாதை மற்றும் நட்பை காட்டும் அழகான ஒரு காட்சியாக சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இப்படியான 'ஜெயிலர்' படம், வசூலில் சாதனைகளை புரிந்தாலும், கதைக்காக விமர்சனங்கள் ஏற்பட்டது. இதனைச் சரி செய்யும் நோக்கத்தில் 'ஜெயிலர் 2' மிக வலுவான திரைக்கதையுடன் வருகிறது என, படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் ரஜினி ஸ்டைல், செருப்படி டயலாக், மெட்ராஸ் பாஷை ஆகியவை படத்தில் மீண்டும் அடையாளமாயிருக்கப்போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அனிருத் இசையமைக்கும் ‘ஜெயிலர் 2’ இசை பாடல்கள், டீசர் மற்றும் பிப்ரவரி மாதம் முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசரில் ஏற்கனவே படத்தின் பின்னணி இசை ஒரு மாஸ் வெவ்வேறு வேடத்தில் ரஜினியின் கேரக்டரைக் காட்டும் வகையில் உருவாக்கப்படுகிறது.

இப்படம் சுமாராக ரூ.250 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. ஆகவே ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைக்கதையைப் பொறுத்தவரை, ரசிகர்களுக்கு இது ஒரு மீட்பு ரகசிய திட்டம் போலவே இருக்கலாம். 'கூலி' வெற்றிக்குப் பிறகு, தலைவர் இன்னொரு மாஸ் வெற்றியை நோக்கி பயணிக்கிறார்.
இதையும் படிங்க: 'பொன்னியின் செல்வன்' பட பாடல் விவகாரத்தில் புதிய திருப்பம்..! உச்ச நீதிமன்ற உத்தரவால் நிம்மதி பெருமூச்சு விட்ட ஏ.ஆர் ரகுமான்..!