சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் ஸ்டைல் கலந்த பல படங்களை பார்த்து பழகியவர்கள் மீண்டும் அதே போல் ஒரு படம் வந்தால் நன்றாக இருக்கும் என கூறிவந்த நேரத்தில் களமிறங்கிய படம் தான் "ஜெயிலர்". எப்படி இன்று நடிகர் அஜித் குமாரின் ஃபேன் பேஸ் படம் என்று "குட் பேட் அக்லி" படத்தை சொல்கிறார்களோ அதே போல்தான் ஜெயிலர் படமும். இதில் நடிகர் ரஜினியை பார்த்து மக்கள் கொண்டாடினர். அதுவும் தமிழகத்தில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பிரச்சனை சென்று கொண்டிருந்த பொழுது, "உன் அழும்பை பார்த்தவன் உங்கப்பன் விசிலை கேட்டவன்" என இசையமைப்பாளர் அனிருத் பாடல் பாடி, என்றும் நிறந்தர சூப்பர் ஸ்டார் ரஜினி தான் என்பதை சொன்ன படம் தான் இந்த ஜெயிலர்.

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் படைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவான மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த திரைப்படம் தான் ஜெயிலர். அதற்கு காரணம் நெல்சன் திலீப் குமாரின் படைப்புதான். இப்படத்தில், தன் மகனுக்காக மீண்டும் ஜெயிலராக மாறினால் என்ன நடக்கும் என்பதை வில்லனுக்கு தெளிவாக காண்பிப்பார் ரஜினிகாந்த்.
இதையும் படிங்க: ரஜினியை போல் பேக் அடிக்கிறாரா விஜய்..! கசிந்த ரகசியம்.. ரசிகர்கள் ஹேப்பி.. தொண்டர்கள் அதிர்ச்சி..!

மேலும் வீட்டில் பொட்டி பாம்பாய் அடங்கி இருந்த ஜெயிலர் தனது மகனை கண்டுபிடிக்கும் போராட்டத்தில், தனது மனைவி கதாபாத்திரத்தில் நடித்த நீலாம்பரியையே (ரம்யாகிருஷ்ணன்) அவர் வாயால் "போதும் இதோட கொஞ்சம் நிறுத்திக்கொள்ளலாமே" என்று சொல்லும் அளவிற்கு நடிப்பில் படையப்பாவை கண்முன் கொண்டு வந்தார். மேலும் இப்படத்தில் காமெடி என பார்த்தால் "பாரதியார் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா" என ஒவ்வொரு முறையும் கூறி அனைவரையும் சிரிக்க வைத்து இருப்பார் யோகி பாபு.

இப்படிப்பட்ட அட்டகாசமான படம் மீண்டும் வந்தால் நன்றாக இருக்குமே என ரசிகர்கள் ஆவலுடன் பேசிக்கொண்டு இருக்க, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கவலை படாதீங்க மக்களே, உங்கள் ரஜினி உங்களுக்காக ஜெயிலர் 2வில் வருகிறார் என்ற இனிப்பான செய்திகளை கொடுத்தார். இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனக்குண்டான முதல் பாகங்களை கோயம்புத்தூரில் நடித்து முடித்துள்ளார். மேலும் இப்படத்தை குறித்து பேசிய யோகி பாபு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அருமையாக உள்ளது என தெரிவித்தார்.

இப்படி இருக்க ஜெயிலர் 2வில் மீதமுள்ள காட்சிகளை படமாக்கும் பணிகள் கேரளாலாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக கேரளாவிற்கு சென்ற ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். இந்த நிலையில், கேரளாவில் இருந்து சென்னைக்கு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், “ஜெயிலர் 2 படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் முடிவடையும். நீங்கள் எதிர்பார்க்காததை விட படம் நன்றாகவே வந்துள்ளது” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேரள அரசியலில் களமிறங்கும் ரஜினிகாந்த்..! அமைச்சர் சந்திப்பால் கலக்கத்தில் கட்சியினர்..!