ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நிலவும் பதற்றத்திற்கு இடையே, இந்தியா வந்தடைந்துள்ள இரண்டு எரிவாயு கப்பல்கள் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்துள்ள 'சிவாலிக்' மற்றும் 'நந்தா தேவி' ஆகிய இரண்டு கப்பல்களில் உள்ள 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி, இந்தியாவின் ஒன்னரை நாள் (1.5 நாட்கள்) தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் சராசரி தினசரி எல்பிஜி நுகர்வு சுமார் 90,000 மெட்ரிக் டன் ஆகும். இதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இப்போது வந்துள்ள எரிவாயு மிகவும் குறைவானது என்றும், இது தற்காலிகமான தீர்வாகக் கூட இருக்க முடியாது என்றும் அவர் சாடியுள்ளார்.

வெறும் ஒன்னரை நாள் தேவையை வைத்துக் கொண்டு நிலைமை சீராகிவிட்டதாகக் காட்டிக் கொள்ள வேண்டாம். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். போர் சூழலால் மார்ச் முதல் பாதியில் இந்தியாவின் எல்பிஜி நுகர்வு 17% சரிவடைந்துள்ளது. பல மாநிலங்களில் சிலிண்டர் விநியோகத்தில் 25 நாட்கள் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இரு இந்திய LPG கப்பல்கள்!
உள்நாட்டு உற்பத்தியை 25% முதல் 38% வரை அதிகரிக்கவும், வணிக ரீதியான எரிவாயு விநியோகத்தைக் குறைத்து வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் மொத்த எல்பிஜி இறக்குமதியில் 90% ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருவதால், இந்தப் போர் நீடித்தால் எரிவாயு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: அறுசுவை பச்சடி போல இனிமை பெருகட்டும்! தெலுங்கு, கன்னட மக்களுக்கு ஈபிஎஸ் யுகாதி வாழ்த்து!