மலையாளத் திரையுலகில் 2015-ம் ஆண்டு வெளிவந்த ‘பிரேமம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அந்தப் படத்தின் வெற்றியால் ஒரே இரவில் புகழ்பெற்ற அவர், பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் சிறப்பாக நடித்து தென்னிந்திய சினிமாவின் முக்கிய முகமாக திகழ்கிறார். இப்படி அழகு, திறமை, மற்றும் இயல்பான நடிப்பு ஆகிய மூன்றையும் இணைத்து ரசிகர்களை கவரும் அனுபமா, தற்போது பல்வேறு மொழிகளில் புதிய திட்டங்களில் பிஸியாக இருக்கிறார்.
இதையும் படிங்க: தோழியுடன் சண்டை போட்ட நடிகை..! இன்று உலகில் இல்லாததால் வேதனையில் அனுபமா சொன்ன அந்த வார்த்தை..!
அதில் முக்கியமான ஒன்று, அவர் நடித்து வரும் புதிய மலையாள படம் ‘தி பெட் டிடெக்டிவ்’ ஆகும். இப்படி இருக்க அனுபமா பரமேஸ்வரன் 2015-ம் ஆண்டு ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் நடித்த “மேரி” என்ற கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் அழியாத இடம் பிடித்தது. அந்தப் படத்தின் மூலம் அவர் குறைந்த நாட்களில் பெரும் ரசிகர் வட்டத்தைப் பெற்றார். பின்னர் அவர் தெலுங்கில் ‘ஆ ஆ’, ‘ஹலோ குரு ப்ரீம கோசமே’, போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழ் திரையுலகில் அவர் அறிமுகமானது தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது எளிமையான நடிப்பு மற்றும் இயல்பான முகபாவனைகள் விமர்சகர்களால் பாராட்டப்பட்டன. அவரது சமீபத்திய தமிழ் படம் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’, சமூக உணர்வுகளை மையமாகக் கொண்ட கதையைக் கூறுகிறது.
அதில் அனுபமா ஒரு வலுவான பெண்மணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாரி செல்வராஜ் படங்களில் காணப்படும் சமூகக் கருத்துக்கள், அனுபமாவின் நடிப்பில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. தற்போது அனுபமா பரமேஸ்வரன் நடித்து வரும் புதிய படம் ‘தி பெட் டிடெக்டிவ்’. இதை இயக்கியிருப்பவர் பிரணீஷ் விஜயன், அவர் தனது முந்தைய படங்களின் மூலம் வித்தியாசமான கதை சொல்லும் பாணிக்கு பெயர் பெற்றவர். இந்தப் படம் முழுக்க நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் கலவையுடன் கூடிய ஒரு லைட்-ஹார்டட் எண்டர்டெயின்மென்ட் ஆகும். படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஷராபுதீன், அவர் பல பிரபலமான மலையாள நகைச்சுவை படங்களில் நடித்தவர். ‘தி பெட் டிடெக்டிவ்’ படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் இதற்கு முன்பு ‘கய்யலம்’, ‘பாத்து கோபாலம்’ போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளது. படத்தின் தலைப்பே சுவாரஸ்யம் நிறைந்தது தான்.. காரணம் “தி பெட் டிடெக்டிவ்” தலைப்பை கொண்ட இப்படத்தின் கதைக்களம் ஒரு இளம் பெண் மற்றும் அவளது செல்லப்பிராணி மையமாக அமைந்துள்ளது.

ஒரு எதிர்பாராத சம்பவத்தில் அந்த செல்லப்பிராணி காணாமல் போகிறது, அதனைத் தேடும் முயற்சியின் போது வெளிச்சத்துக்கு வரும் சுவாரஸ்யமான சம்பவங்களே இப்படத்தின் மையக்கரு. அனுபமா இதில் ஒரு சுறுசுறுப்பான, உற்சாகமான பெண்ணாக நடித்துள்ளார். அவர் கதாபாத்திரம் முழுக்க நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலவையுடன் உருவாக்கப்பட்டதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனை குறித்து இயக்குனர் பிரணீஷ் விஜயன் கூறுகையில், “அனுபமா பரமேஸ்வரன் இந்த கதாபாத்திரத்தை நம்ப முடியாத அளவுக்கு உயிரோட்டமாக்கியுள்ளார். அவரது முகபாவனை, டைமிங், மற்றும் இயல்பான நடிப்பு என இவை எல்லாம் படத்தின் பலம்.” என்றார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் யூடியூபில் வெளியிடப்பட்டது. அது வெளிவந்த சில மணிநேரங்களிலேயே ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. டிரெய்லரில் அனுபமா நகைச்சுவை ரீதியில் காட்சியளிப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
The Pet Detective - Trailer | Sharaf U Dheen,Anupama Parameswaran - click here
இப்படி இருக்க ‘தி பெட் டிடெக்டிவ்’ படம் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளத்தில் வெளியாகும் இந்தப் படம் பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. திரையுலக வட்டாரங்களில், “இந்த படம் அனுபமாவுக்கான ஒரு புதிய திசை” என்று கருத்துகள் எழுந்துள்ளன. நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த இப்படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடியதாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். இந்த படத்தைப் பற்றிக் கூறிய அனுபமா பரமேஸ்வரன், “இந்த படம் எனக்கு ஒரு முழுமையான புதிய அனுபவம். இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் பெரும்பாலும் காதல் கதைகள் அல்லது தீவிரமான கதாபாத்திரங்கள் இருந்தன. ஆனால் ‘தி பெட் டிடெக்டிவ்’ எனக்கு ஒரு சிரிப்பும், சுவாரஸ்யமும் நிறைந்த சவாலான அனுபவம். நான் ஒரு செல்லப்பிராணி ரசிகை என்பதால், இந்தக் கதைக்கு உடனே இணைந்துவிட்டேன். படம் குடும்பம் முழுக்க ரசிக்கக்கூடியதாக இருக்கும்” என்றார். திரையுலக வட்டாரங்களும் அனுபமாவின் வளர்ச்சியை கவனமாகப் பார்க்கின்றன.

ஆகவே நடிகை அனுபமா பரமேஸ்வரன், ‘பிரேமம்’ மூலம் ரசிகர்களின் இதயத்தில் புகுந்தார்,பின் ‘கொடி’ மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார், இப்போது ‘தி பெட் டிடெக்டிவ்’ மூலம் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தப் போகிறார். அவரின் சுறுசுறுப்பு, கவர்ச்சி, மற்றும் இயல்பான நடிப்பு இணைந்தால், இந்த படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய மிகச் சிறந்த எண்டர்டெயின்மென்ட் ஆக மாறும் என்பதில் சந்தேகமில்லை. எனவே அக்டோபர் 16 அன்று படம் வெளியான பிறகு, அனுபமா மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் ஹீரோயினாக மாறுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்களும் தயாரிப்பு குழுவும் உள்ளனர்.
இதையும் படிங்க: தோழியுடன் சண்டை போட்ட நடிகை..! இன்று உலகில் இல்லாததால் வேதனையில் அனுபமா சொன்ன அந்த வார்த்தை..!