தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை கவர்ந்துவரும் நடிகர்களில் முக்கியமாக பார்க்கப்படுபவர் நடிகர் விக்னேஷ். இவர் கிழக்கு சீமையிலே, உழவன், கண்ணெதிரே தோன்றினாள், சுயம்வரம், அப்பு உள்ளிட்ட பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படிப்பட்ட இவர் கடந்த காலங்களில் தனது ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தாலும், தற்போது மாணிக்கம் தயாரிப்பில், ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட் பிளவர்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் நடித்து தமிழ் திரையுலகில் திரும்ப நீங்கா இடம்பிடிக்க வந்திருப்பதுடன் அதிகளவு ரசிகர்களையும் கவர் வந்திருகிறார்.
அதன்படி, ‘ரெட் பிளவர்’ படத்தின் விழாவில், பிரபல நடிகர் விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது விஷால் பேசியபோது அவரது கைகள் நடுங்கியது. இதற்கு முன்பு ‘மதகஜராஜா’ படவிழாவில் அவர் பேசிய போது கைகள் நடுங்கியதற்கான வீடியோ வைரலானது. தற்பொழுது அதேபோல் இன்றைய ‘ரெட் பிளவர்’ பட விழாவில் கைகள் நடுங்கிய நிலையில் விஷால் பேசினார். அந்த வகையில் விஷால் பேசியதில், " திரைப்படங்களை விமர்சனம் செய்வது என்பது தவறில்லை, அது ஒரு இயல்பான நிகழ்வு. ஆனால் விமர்சனங்கள் என்பது ஒருவரை துயரப்பட செய்வது அல்லது அவமதிப்பாக மாறாமல், சினிமா ரசிகர்களும் விமர்சகர்களும் படம் பார்த்து தங்கள் கருத்துக்களை சொல்வது மிக முக்கியம் என்று வலியுறுத்தினார். மேலும், “டிக்கெட் வாங்கி, படம் பார்த்து பின்னர் விமர்சனம் செயுங்கள்" என்று கூறி, சரியான விமர்சன நடைமுறை பற்றி உணர்த்தினார்.

மேலும், விமர்சனங்களின் தாக்கம் திரையரங்குகளுக்கு வெளியில் கூட அதிகமாகிவிடும், அதனால் அவற்றை தியேட்டர் வளாகங்களுக்கு வெளியே பரப்பாமல் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார். மேலும் ஒரு முக்கியமான கருத்தாக, ஒரு திரைப்படம் வெளியான முதல் 3 நாட்கள் மிக முக்கியமானவை. எனவே, இந்த மூன்று நாட்களில் படத்தின் வரவேற்பு, விமர்சனங்கள் படத்தின் கிட்டத்தட்ட எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதால், முதல் நாளில் தியேட்டரில் சென்று படம் பார்த்த பின்னர் விமர்சனம் வழங்க வேண்டும்.. அதுமட்டுமல்லாமல் தியேட்டர் வளாகத்தில் விமர்சனம் கேட்க அனுமதிக்காதீர்கள் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இணையத்தில் லீக்-ஆன ரஜினியின் ‘கூலி’ படத்தின் கதை...! படக்குழுவை பதறவைத்த அதிர்ச்சி சம்பவம்..!
தமிழ் சினிமா ரசிகர்கள் ‘ரெட் பிளவர்’ படத்தில் விக்னேஷின் நடிப்பு மற்றும் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவான கதையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். மாணிக்கம் தயாரிப்பில் வெளிவரும் இந்த படம், தரமான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை, வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் போன்ற அம்சங்களில் திகழும் என்று நம்பப்படுகிறது. மேலும், ‘ரெட் பிளவர்’ திரைப்பட விழா நிகழ்ச்சியில் விஷால் பேசியது தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த நிகழ்ச்சி தமிழ் திரையுலகில் திரைப்பட விமர்சன பண்பின் மேம்பாட்டுக்கு உதவும் ஒரு முக்கியமான அத்தியாயமாக இருப்பதாகவும், ‘ரெட் பிளவர்’ படம் வெற்றியடையும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
இதையும் படிங்க: 'ஹாரி பாட்டர்' நடிகை எம்மா வாட்சனுக்கு ஷாக் கொடுத்த நீதிபதி..! ஃபேமஸாக இருப்பதால் இப்படி ஒரு தண்டனையாம்..!