தமிழ் திரையுலகில் "நானும் மதுர காரன் தாண்டா" என சொல்லி மக்கள் மத்தியில் அதிகம் ஃபேமஸ் ஆனவர் தான் நடகர் விஷால். அவரது படங்களில் தாமிரபரணி, சண்டைக்கோழி படங்களை யாராலும் மறக்க முடியாது.
அப்பொழுதே மக்கள் மனதில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஷால், அடுத்தடுத்து தனது நடிப்பால் பல இளசுகளின் மனதை கவர்ந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் பார்க்க கருமையாக இருந்தாலும் உடல் வலிமையில் ஜைஜான்டிக்காக இருந்தாலும் மனதளவில் ஒரு குழந்தை என்றே சொல்லலாம்.

முன்னணி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான ஜி. கே. ரெட்டி என்பவரின் மகனான விஷால் தனது கல்லூரி படிப்பை முடித்ததும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரரும் அவரை படத்தில் நடிக்க வைக்க விரும்பினர், அதனால் சினிமா துறையில் கால் வைத்த விஷால் முதலில், நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் பணியாற்றி சினிமாவின் நுணுக்கங்களை கற்று கொண்டார். அதன் பின், செல்லமே படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்க உடனே நடிப்பிற்கான பயிற்சியை பெற்று அந்த படத்தில் நடித்தார். அந்த படமும் ஹிட் அடிக்க அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: Anna Serial: சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பும் இசக்கி! கொந்தளித்த வீரா - அண்ணா சீரியல் அப்டேட் !

மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பொழுது அவரது ஆர்.கே. நகர் தொகுதியில் தைரியமாக போட்டியிட்டார். இது அந்த சமயத்தில் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இந்த சூழலில் தற்பொழுது தமிழ் சினிமா சங்கக்கத்தில் தலைவராக உள்ளார் நடிகர் விஷால். இப்படி இருக்க, இதுவரை தமிழ் திரையுலகில், செல்லமே, சண்டக்கோழி, சிவப்பதிகாரம், டிஷ்யூம், திமிரு, தாமிரபரணி,

மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, வெடி, அவன் இவன், சமர், தீயா வேலை செய்யணும் குமாரு, பட்டத்து யானை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஆம்பள, பாயும் புலி, தாக்க தாக்க, கதகளி, மருது, கத்திச்சண்டை, துப்பறிவாளன், இரும்பு திரை, சண்டகோழி 2, ஆக்ஷன், அயோக்யா, எனிமி, சக்ரா, லத்தி, வீரமே வாகை சூடும், மார்க் ஆண்டனி, ரத்னம், நாளை நமதே, துப்பறிவாளன் 2, மத கஜ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் விஷால் தனது திருமணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன்படி "கொஞ்சம் பொறுங்கள் இன்னும் நான்கு மாசத்தில் நீண்ட நாள் காத்திருப்புக்கான 'நடிகர் சங்கம் கட்டிடத்தின் திறப்பு விழா' நடைபெற இருக்கிறது. அதற்கான வேலையில் மிகவும் தீவிரமாக இறங்கியிருக்கிறார் நடிகர் கார்த்தி. அதற்கு பின், எனக்குரியது எல்லாம் நல்லபடியா நடக்கும். நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா பத்திரிக்கையோட சீக்கிரம் வந்து உங்களை சந்திக்கிறேன்.

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிவிட்டு அப்படியே போகப்போவதில்லை, அங்கு திரையுலகின் பல கொண்டாட்டங்கள் நிறைந்த இடமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். தினமும் நடிகர் சங்கத்தில் ஏதாவது ஒரு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கும். அந்த வகையில், நடிகர் சங்க கட்டிடம் திறப்புக்கு பின் முதல் நாள் நடிகர் நாசர் அவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் என்றால், மறுநாள் பசுபதி சார், தனது விருமாண்டி படத்தில் நடித்த அனுபவங்களை குறித்து பகிர்ந்து கொள்வார். அதைப் பார்க்க ஆர்வம் உள்ள திரைத்துறையினர் கலந்து கொண்டு மகிழலாம்" என்றார்.

இதனை அடுத்து தமிழ் திரையுலகில் முதன் முதலாக சிக்ஸ் பேக் வைத்தவர் நடிகர் சூர்யாதான் என அவரது தந்தை சிவகுமார் சொல்லுகிறாரே என செய்தியாளர்கள் கேட்க, அதற்கும் பதிலளித்த விஷால், " உண்மையாகவே தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிக்ஸ் பேக் வைத்தவர் நடிகர் தனுஷ் தான். அவர்தான் வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' படத்தில் முதலில் சிக்ஸ் பேக் வைத்தார். அதன் பின்னர் தான் நான் 'சத்யன்' படத்திலும் 'மத கஜ ராஜா' படத்திலும் சிக்ஸ் பேக் வைத்தேன்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 52வது திருமண நாளுக்கு எஸ்.ஏ.சி கொடுத்த "நச்" கிப்ட்..! ஆச்சர்யத்தில் உறைந்த மனைவி ஷோபா..!