சமூக உண்மைகளை துணிச்சலாக சித்தரிப்பதில் தனித்த அடையாளம் கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ், தனது புதிய படைப்பு ‘பைசன்’ மூலம் மீண்டும் ரசிகர்களை, விமர்சகர்களை, சமூக வட்டாரங்களையும் பேச வைக்கிறார். இப்படி இருக்க இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள “பைசன்” படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்த படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படிப்பட்ட “பைசன்” படம் ஒரு உண்மை கதை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. அர்ஜுனா விருது பெற்ற இவர், தன்னுடைய திறமை, தைரியம் மற்றும் சமூக அடையாளப் போராட்டத்தால் பெரும் கவனத்தை பெற்றவர். இந்த படத்தில் துருவ் விக்ரம், அவரை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் நடிப்புக்கு விமர்சகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். “அந்தரங்க சண்டைகள், சமூக ஒடுக்குமுறைகள் மற்றும் சாதி அடிப்படையிலான தடைகளை எதிர்கொண்டு முன்னேறும் மனிதன்” என இதுவே பைசனின் மையக் கருத்து. இந்த படத்தில் துருவ் விக்ரத்துடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு நடிகரின் நடிப்பும் கதைக்கு உயிரூட்டும் வகையில் அமைந்துள்ளது.
மாரி செல்வராஜ் வழக்கம்போல் “நடிப்பின் இயல்பை” வெளிப்படுத்தியுள்ளார். மாரி செல்வராஜ் தனது முந்தைய படங்கள் ‘பெரிய பெருமாள்’, ‘கர்ணன்’ போன்றவற்றில் சமூக உண்மை, சாதி ஒடுக்குமுறை, அரசியல் பாகுபாடு போன்ற கருப்பொருட்களை துணிச்சலாக கையாள்ந்தவர். ‘பைசன்’ படத்திலும் அதே போக்கு தொடர்கிறது. அவரது திரைக்கதை சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் குரலை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், இதே காரணத்திற்காகவே சிலர் அவரை தொடர்ந்து விமர்சிக்கின்றனர். ஆனால், மாரி செல்வராஜ் தனது சிந்தனையில் உறுதியாக உள்ளார். படம் வெளியான பிறகு பேட்டியொன்றில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ், சமூக வலைதளங்களில் பேசப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
இதையும் படிங்க: "பைசன்" படத்தில் நான் தவறு செய்துவிட்டேன்..! பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இயக்குநர் மாரி செல்வராஜ்..!

அவர் பேசுகையில், “இன்னும் நம்முடைய சினிமா, தனிமனிதர்களை புகழ்பாடும் கதைகளிலேயே தன்னை சிக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதனின் சாதனையை மட்டுமே கொண்டாடும் படங்களுக்கு யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால், தென் மாவட்டங்களில் நடக்கும் உண்மை சம்பவங்களை, சமூக பிரச்சனைகளை நான் படமாக்கினால் மட்டும் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள். ஒரு உண்மை கதை போதும் என சொல்லப் போவது யார்?, யார் அந்த உரிமையை கொடுத்தது?, உண்மையை எதிர்கொள்ள ஏன் இவ்வளவு பயம், தயக்கம்?” என்றார். இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. பலரும் அவரின் துணிச்சலை பாராட்டுகின்றனர், சிலர், “சினிமாவை அரசியல் மேடையாக்க வேண்டாம்” என்றும் கூறுகின்றனர். இப்படியாக ‘பைசன்’ படத்தின் ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, இசை, மற்றும் எடிட்டிங் அனைத்தும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
அவரது பின்னணி இசை படத்தின் உணர்ச்சியை தாங்கி நிற்கிறது. கபடி போட்டி காட்சிகள் மிகுந்த நிஜத்தன்மையுடன் எடுக்கப்பட்டுள்ளன. துருவ் விக்ரம் தனது உடல் அமைப்பை முழுமையாக மாற்றி அந்த வீரர் உருவத்தை வாழ்த்தியுள்ளார். பசுபதி மற்றும் கலையரசனின் நடிப்பும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. மாரி செல்வராஜ் எப்போதுமே தனது படங்கள் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்க விரும்புகிறார்.
இதனை குறித்து அவர் பேசுகையில், “சினிமா ஒரு பொழுதுபோக்கு கருவி மட்டும் அல்ல, அது சமூக உண்மையைப் பேசும் மேடை. யாரோ ஒருவரின் உண்மை கதை, இன்னொருவருக்கு புரிதலைத் தரலாம்” என்றது தான். ‘பைசன்’ படமும் அதே நோக்கத்தோடு உருவாகியுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை போன்ற பகுதிகளில் நடக்கும் சமூக பிரச்சனைகளை நேரடியாக காட்சியளிக்கிறது. ‘பைசன்’ படத்தின் மூலம் மாரி செல்வராஜ் மீண்டும் ஒரு முறை “சமூகத்திற்காக சினிமா” என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே மாரி செல்வராஜின் “பைசன்” ஒரு சாதாரண விளையாட்டு படம் அல்ல.. அது ஒரு மனிதனின் அடையாளப் போராட்டத்தின் கதை. துருவ் விக்ரத்தின் திறமையான நடிப்பு, மாரி செல்வராஜின் தைரியமான இயக்கம், மற்றும் சமூக உண்மை கலந்து அமைந்த திரைக்கதை என இவை அனைத்தும் சேர்ந்து “பைசன்” படத்தை ஒரு வலுவான சமூகப் படைப்பாக மாற்றுகின்றன.

சிலர் இதை சர்ச்சை படமாகக் கருதினாலும், பலருக்கு இது உண்மையைச் சொல்லும் சினிமா. மொத்தத்தில், ‘பைசன்’ படம் - “மனித மனதையும், சமூக உண்மையையும் மோதும் தைரியமான ஓர் குரல்.
இதையும் படிங்க: பிரதீப் ரங்ககநாதனின் 'Dude' படம் இன்னும் பாக்கலையா...! அப்ப இதை பாத்துட்டு போங்க.. இல்லைனா..!