தமிழ் திரையுலகில் 1990-களில் வெளியான 'இசைப்புயல்' ஏ.ஆர். ரகுமான் மற்றும் 'நடனப்புயல்' பிரபுதேவா கூட்டணியில் உருவான பாடல்கள், அந்த காலத்து ரசிகர்களின் மனதை மயக்கும் விதமாக இருந்தன. முதன்முறையாக, 1994-ம் ஆண்டு “காதலன்” படத்தின் மூலம் ரகுமான்-பிரபுதேவா இணைந்தனர்.
அதன் பிறகு, இவர்களது கூட்டணியில் வெளியான “லவ் பேர்ட்ஸ்”, “மிஸ்டர் ரோமியோ”, “மின்சார கனவு” போன்ற படங்களும், பாடல்களும் நவீன ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தன. அப்போது ரசிகர்கள் ரசித்த அந்த கூட்டணி, “மின்சார கனவு” படத்திற்கு பிறகு 28 ஆண்டுகள் கடந்த பின்னர், என்.எஸ். மனோஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான “மூன்வாக்” மூலம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் மீண்டும் அந்த “மிகவும் மிஸ் செய்த கூட்டணியை” திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு பெறுகின்றனர். “மூன்வாக்” என்பது பாப் இசை உலகின் மன்னர் மைக்கேல் ஜாக்சன் அவர்களின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவுகளை மையமாகக் கொண்ட படம்.
இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஏ.ஆர். ரகுமான் இசையில், பிரபுதேவாவின் அசுர நடன ஆட்டம் இடம்பெறும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தை பான் இந்தியா அளவில் தயாரிக்க, இசை, நடனம் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, படத்தின் காமெடியையும் குடும்ப பொழுதுபோக்கையும் மேலும் உயர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காதலன் கொடுத்த தொடர் பாலியல் தொல்லை..! அநியாயமாக தற்கொலை செய்துகொண்ட நடிகையின் உறவுக்கார பெண்..!

படத்தை தயாரிக்கும் நிறுவனம் பிஹைன்வுட்ஸ். மேலும், படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ‘லஹரி மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் இசையை விரைவில் கேட்டு ரசிக்க முடியும்.
படக்குழுவினரின் தகவலின்படி, “மூன்வாக்” குடும்ப பொழுதுபோக்கு, நகைச்சுவை மற்றும் இசை கலவையுடன் உருவாக்கப்பட்ட படமாகும். இதன் கதை, நடனம், காமெடி மற்றும் இசை முழுமையாக இணைந்து, பான் இந்தியா அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் வீடியோ பாடல் வெளியாகி, ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இதனால் படத்தின் வெளியீட்டு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
மேலும், படக்குழு சமீபத்தில் போஸ்டர் வெளியீட்டுடன், யோகிபாபு, ஆட்டுக்கால் அழகு ராசா மற்றும் கவரிமான் நாராயணன் ஆகியோர் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்களுக்கு கதையின் முக்கிய நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்களை பற்றிய தெளிவும், மேலும் உற்சாகமும் ஏற்படியுள்ளது. மொத்தத்தில், “மூன்வாக்” படம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரகுமான்-பிரபுதேவா கூட்டணி, இசை, நடனம் மற்றும் நகைச்சுவை மூலமாக தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை உருவாக்கி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் படமாக இருக்கிறது.

இந்த படத்தின் உலகளாவிய வெளியீடு, புதிய தலைமுறை ரசிகர்களையும் முந்தைய கால ரசிகர்களையும் இணைக்கும் விதமாக, தமிழ் மற்றும் இந்திய திரையுலகில் புதிய அலைமோதலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட “ஆல் பாஸ்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!