தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான மீனாட்சி சவுத்ரி, தற்போது வியட்நாம் நாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான Hanoi Train Street-க்கு சென்றுள்ள அவர், ட்ரெண்டியான உடையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இயற்கையான அழகு, ஸ்டைலான உடை மற்றும் வித்தியாசமான பின்னணியில் அமைந்துள்ள இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இதையும் படிங்க: நவராத்திரி ஸ்பெஷல் லுக்கில் ஆலியா பட்.!! பாரம்பரிய உடையில் அசத்தும் பாலிவுட் அழகி..!

தென்னிந்திய சினிமாவில் இளம் தலைமுறை நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மீனாட்சி சவுத்ரி.

தனது அழகு, நடிப்புத் திறமை மற்றும் திரையில் வெளிப்படுத்தும் தனித்துவமான தோற்றத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்து வரும் இவர், குறுகிய காலத்திலேயே திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கியுள்ளார்.

திரைப்படப் படப்பிடிப்புகள், விளம்பர நிகழ்ச்சிகள் எனத் தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் நடிகைகள், அவ்வப்போது தங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்குச் சுற்றுலா செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், மீனாட்சி சவுத்ரி தற்போது வியட்நாம் நாட்டுக்குச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: ‘மஹாசக்தி’ அவதாரத்தில் நயன்தாரா..! ரூ.100 கோடி மெகா பட்ஜெட்டில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’... பூஜை சிறப்பு போஸ்டர் ரிலீஸ்..!