டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படம் நகைச்சுவை திகில் படமாக கொண்டு சந்தானம் நடிப்பில் எடுக்கப்பட்ட படம் நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்தில் சீனிவாச கோவிந்தா என்று தொடங்கும் வகையில் ஒரு பாடலுக்கு சந்தானம் நடனத்துடன் கூடிய பாடல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் யூடியூப்பில் வெளியான நிலையில் தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள பல கோடி மக்கள் புனிதமாக கருதக்கூடிய பெருமாளின் பக்தி பாடலை சினிமாவுக்காக வேண்டுமென்று பக்தர்களின் மனம் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானுபிரகாஷ் ரெட்டி அவரது வழக்கறிஞர் அஜய்குமார் மூலம் நடிகர் சந்தானம், தயாரிப்பு நிறுவனமான நிகாரிகா எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: கணவரை கலாய்த்த நடிகர்.. கடுப்பான தேவயானி.. உண்மையை சொல்லி சரண்டரான சந்தானம்..!

அதில் உடனடியாக அந்த படம் வெளியாவதை நிறுத்த வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் அந்தப் பாடலை நீக்க வேண்டும். ஏழுமலையான் பக்தர்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ₹ 100 கோடி கேட்டு மானநஷ்ட இழப்பு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே சர்ச்சைக்குரிய பாடலை நாளை திரைக்கு வரும் பொழுது நீக்கப்படுவதாகவும் யூடியூப்பில் காப்புரிமை வேறு ஒருவரின் இடம் உள்ளதால் அதனையும் விரைவில் நீக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவுக்கு ஆதரவு கொடுப்பியா..? சந்தானம் மீது ரூ.100 கோடி மானநஷ்டஈடு வழக்கு போட்ட பாஜக..!